அனைத்து இந்திய மீனவர்களும் விடுவிப்பு: மஹிந்த உத்தரவு

mahinda modiகொழும்பு: இலங்கைச் சிறைகளில் இருக்கும் அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என்று அவரது அலுவலகம் தெரிவிக்கிறது.

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிலையில், ஒரு நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவதாக அவரது அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

எதிர்வரும் திங்கள்கிழமை மோடி பிரதமராக பதவியேற்கவுள்ள விழாவில் கலந்து கொள்ள மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் செல்லவிருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இலங்கைகு எதிரான ஐ நா தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா பங்கெடுக்காமல் இருந்த பிறகு, இதேபோல ஒரு தொகுதி இந்திய மீனவர்களை விடுவிக்க அவர் உத்தரவிட்டிருந்தார்.

நரேந்திர மோடியின் பதவியேற்புக்கு புதுடில்லி செல்லும் இலங்கைக் குழுவில் வெளியுறவு அமைச்சர் பீரிஸ், கால்நடை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தொண்டமான் ஆகியோரும் செல்கின்றனர் என்று ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Published by

Leave a comment