Author: yourkattankudy.com
-
மருத்துவத்தில் புது மைல்கல்: புதிய அண்டிபயடிக் கண்டுபிடிப்பு
கலிஃபோர்ணியா: நீண்டநாட்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புது ரக அண்டிபயடிக் ஒன்றை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். பக்டீரியாக்களை வளர்ப்பதில் அமெரிக்க விஞ்ஞானிகள் கடைபிடித்த புதிய வழிமுறைகள் 25 புதிய அண்டிபயடிக் மருந்துகளை உருவாக்க உதவியிருக்கிறது. இதில் ஒரு அண்டிபயாடிக் மருந்து “மிகவும் நம்பிக்கையளிப்பதாக” விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
-
மட்டக்களப்பில் ‘மைத்திரியின் வாடை’
காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் பி.ப. 2 மணிவரை 50% வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், வாக்காளர்களிடம் பெற்றுக்கொண்ட இரகசிய கணிப்பின்படி அளிக்கப்பட்ட வாக்குகளில் அதிகமானவை மைத்திரிக்கே அளிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.
-
மட்டக்களப்பில் ‘பிள்ளையான்’ ஆதரவாளர்களால் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல்
மட்டக்களப்பு: மட்டக்களப்பில் சிவனேசதுறை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) ஆதரவாளர்கள் சிலர் வாக்காளர்களை அச்சுறுத்தியதாக கபே அமைப்புக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
-
ஒரே ஒரு பந்தில் 7 ஓட்டங்கள் பெற்று உலக சாதனை!!
கெப்டவுண்: தென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிரேக் பிராத்வெய்ட் ஒரே ஒரு பந்தில் 7 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார். தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி கெப்டவுண் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. அந்தப் போட்டியில் தான் இந்த உலக சாதனை அரங்கேறியுள்ளது.
-
வடமராட்சியில் வாக்குச்சாவடிக்கு அருகில் கைக்குண்டு தாக்குதல்
வடமராட்சி: பருத்தித்துறை, அல்வாயில் பாடசாலை வாக்குசாவடி அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டின் மீது இனம் தெரியாத நபர்களால் கைகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அச்சம் நிலவுவதோடு பெருந்தொகையான பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
வாக்குப்பதிவு மும்முரம்: என்றுமில்லாதவாறு மக்கள் ஆர்வம்!!
கொழும்பு: ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி காலை ஏழு மணிக்குத் துவங்கியது. தற்போது நீண்ட வரிசைகளில் காத்திருந்தபடி மக்கள் வாக்களித்து வருகின்றனர்.உள்ளூர் நேரப்படி நண்பகல் வரை சுமார் 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் கூறுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்தத் தேர்தலில் சுமார் ஒரு கோடியே 58 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
-
மைத்திரி, மஹிந்த வாக்களிப்பு
கொழும்பு: மஹிந்த ராஜபக்ஷ வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்திலும், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை புதியநகர் வித்தியாலோக விஹாரையிலும் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
-
7 வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சுமுகமான முறையில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் 2015 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றது. பொலிசாரின் பாதுகாப்புடன் இடம்பெறுகின்ற இத் தேர்தல் வாக்களிப்பில் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் பலர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
-
காத்தான்குடி சகோதரிகள் நேரகாலத்தோடு வாக்களியுங்கள்
– AF -90 காத்தான்குடி: இன்று இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் நேர காலத்தோடு வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களது வாக்குரிமையை சுதந்திரமாக தாங்கள் விரும்பும் ஒருவருக்கு அளிக்குமாறு கேட்கப்படுகின்றனர்.
-
VIP, VVIP அடையாளத்துடன் செல்லும் வாகனத்தை கைப்பற்ற உத்தரவு
கொழும்பு: வீ.ஐ.பி/ வீ.வீ.ஐ.பி. போலி இலக்கத் தகடுகள் மற்றும் இலக்கத் தகடுகள் இல்லாமல் வீதியில் செல்லும் வாகனங்களை கைப்பற்றுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கே இவ்வாறு பொலிஸ் மா அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
-
நேரகாலத்தோடு வாக்களியுங்கள்: காலை 7 முதல் பி.ப. 4 வரை வாக்களிக்கலாம்
கொழும்பு: ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ‘ஜனாதிபதி தேர்தல்’ இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணிவரையில் தேர்தல் நடாத்தப்படும். வாக்காளர்கள் இயலுமானவரை காலையிலேயே சென்று தமது வாக்குகளை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
மைத்திரியை புலனாய்வுப் பிரிவு கைது செய்யும் திட்டம் புத்திசாதுர்யமாக முறியடிப்பு!
கொழும்பு: பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றியை பெறுவார் என்ற கருத்து கணிப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில் அவரை இராணுவ முற்றுகையில் கைது செய்து வீட்டு காவலில் வைக்க குற்றத் தடுப்புப் புலனாய்வு பிரிவினர் எத்தனித்தனர்.