VIP, VVIP அடையாளத்துடன் செல்லும் வாகனத்தை கைப்பற்ற உத்தரவு

ajith rohana policeகொழும்பு: வீ.ஐ.பி/ வீ.வீ.ஐ.பி. போலி இலக்கத் தகடுகள் மற்றும் இலக்கத் தகடுகள் இல்லாமல் வீதியில் செல்லும் வாகனங்களை கைப்பற்றுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கே இவ்வாறு பொலிஸ் மா அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

போலி இலக்கத் தகடுகளுடனும், இலக்கத்தகடுகள் இல்லாமலும், பதிவு செய்யப்படாமலும் தெளிவற்ற இலக்கத் தகடுகளுடன் கூடிய வாகனங்கள் வீ.ஐ.பி/ வீ.வீ.ஐ.பி. என்ற அடையாளத்துடன் செல்லும் வாகனங்களையும் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதுடன், சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வீதிச் சோதனைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சகல பொலிஸாருக்கும் பணிப்புரை வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Published by

Leave a comment