ஒரே ஒரு பந்தில் 7 ஓட்டங்கள் பெற்று உலக சாதனை!!

west indiesகெப்டவுண்: தென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிரேக் பிராத்வெய்ட் ஒரே ஒரு பந்தில் 7 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார். தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி கெப்டவுண் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. அந்தப் போட்டியில் தான் இந்த உலக சாதனை அரங்கேறியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிவீரர் கிரேக் பிராத்வெய்ட் தனக்கு வந்த பந்தை வேகமாக அடித்து விரட்டி உடனடியாக ஓட்டங்கள் எடுக்க ஓடினார். அப்படி ஓடியே அவர் 3 ஓட்டங்களை எடுத்து விட்டார்.

west indies

அந்த சமயம் பந்தை வசப்படுத்திய தென்னாபிரிக்க விக்கெட் கீப்பர் ஏப் டிவில்லியர்ஸ், அதை ஸ்டம்ப்பை நோக்கி வீசினார். சற்று வேகமாக வீசியதால் பந்து விக்கெட்டில் படாமல் எல்லைக் கோட்டை கடந்து விட்டது. இதனால் பிராத்வெய்ட்டுக்கு 4 ஓட்டங்கள் கிடைக்க மொத்தமாக 7 ஓட்டங்கள் கிடைத்து விட்டன.

இந்த டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணி வென்றி பெற்றுள்ளதுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே பந்தில் 7 ஓட்டங்கள் எடுத்த சம்பவம் இப்போது தான் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment