காத்தான்குடி சகோதரிகள் நேரகாலத்தோடு வாக்களியுங்கள்

muslim women ladies– AF -90

காத்தான்குடி: இன்று இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் நேர காலத்தோடு வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களது வாக்குரிமையை சுதந்திரமாக தாங்கள் விரும்பும் ஒருவருக்கு அளிக்குமாறு கேட்கப்படுகின்றனர்.

காலையில் சனக்கூட்டம் அதிகமாக இருக்கும், சமைத்துவிட்டுப்போவோம், எல்லோரும் சேர்ந்து போவோம், பிள்ளைகளுக்கு சாப்பாட்டைக் கொடுத்துவிட்டுப் போவோம், துணிகளை கழிவிவிட்டுப் போவோம் என்று அதிகமான எமது ஊர் சகோதரிகள் பிற்பகலில் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிப்பதை கடந்த கால தேர்தல்களின் போது அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இரு பெரும் பிரிவுகளாக ஊர் அரசியல் நிலை இருப்பதால், தேர்தல் மோசடிகளைக் கண்காணிக்கவும், கள்ளவாக்குகளைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகள், பிற்பகலில் அதிகரிக்கலாம்.

எனவே, நேர காலத்தோடு வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று தங்களது வாக்குகளை அளிக்குமாறு கேட்பதுடன், பெண்களுக்கான வாக்களிப்பு நிலையங்களில் பெண் அதிகாரிகளே தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதால், தங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்த முகத்தை தேர்தல் அதிகாரிகளுக்குக் காண்பிப்பதும் கட்டாயமாகும். முக அடையாளத்தை காண்பிக்க மறுப்பவர்கள் ‘கள்ள வாக்காளி’ என சந்தேகப்பட்டு, பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலையும் ஏற்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்

Published by

Leave a comment