Author: yourkattankudy.com
-
பசில் பிணை நிராகரிப்பு
கொழும்பு: முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாளை 7 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. கொழும்பு பெரியாஸ்பத்திரியில் இருந்து அம்பியூலன்ஸ் மூலம் கடுவல நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பெசில் ராஜபக்ஷ கடுவல நீதவான் தம்மிக கனேபொல முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
-
ஈரானை வீழ்த்த மேற்கத்தேய ஆயுத விற்பனையும் மத்திய கிழக்கின் ஆயுதப் போட்டியும்
லண்டன்: ஐக்கிய அரபு எமிரேட்டுகள் தங்களது ராணுவ பலத்தை கணிசமாகப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. கத்தாரும் கூடத்தான். அதே போல சவுதி அரேபியா புதிய வகை ராணுவ தளவாடங்களில் முதலீடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. தற்போது கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி பிரான்ஸ்,கத்தாருக்கு 2018ல் 24 ரஃபேல் போர் விமானங்களை விற்கிறது.
-
சிலைகளை அகற்றக் கோரி காத்தான்குடி நகரசபையில் NFGG பிரேரணை
NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: அண்மையில் காத்தான்குடியில் திறந்துவைக்கப்பட்ட நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை சட்டபூர்வமாக அகற்றுமாறு கோரும் பிரேரணை ஒன்று காத்தான்குடி நகரசபையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் (NFGG) முன்வைக்கப்பட்டுள்ளது.
-
வாக்காளர் இடாப்பு விண்ணப்பப் படிவம் விநியோகம் ஆரம்பம்
கொழும்பு: வாக்காளர் இடாப்பு பதிவுப் பத்திர விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புப் பதிவுப் பத்திரங்களை கிராமசேவகர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் வருகை தந்து விநியோகிப்பார்கள் என்றும் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
-
மைத்திரி – மஹிந்த சந்திப்பு நாளை
கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையேயுள்ள சந்திப்பு நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
-
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது
எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யபட்டதாக பொலீஸ் நிதி மோசடி விசாணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
-
மடு பிரதேச செயலக சதொச விற்பனை நிலையம் இன்று திறப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சதொச விற்பனை நிலையத்தை கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதின் இன்று திறந்து வைத்தார்.
-
பள்ளிவாசல் திறப்பு விழா
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் பாணந்துறை: பாணந்துறை கெசல்வத்தையில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் திறப்பு விழா அண்மையில் இடம் பெற்ற போது கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், தொழிலதிபர் அல்-ஹாஜ். ஜே. புஆத் மற்றும் பள்ளிவாசல் தலைவர் எம்.எம். ஆரிப் ஆகியோர் நாடாவை வெட்டி திறந்து வைப்பதை பள்ளி பரிபாலன சபை உறுப்பினர் சாஹிர் அன்சாரி, பள்ளி அபிவிருத்தி குழு உறுப்பினர்களான பைசல், பயாஜ் ஆகியோரையும் படங்களில் காணலாம்.
-
அகில இலங்கை ரீதியில் காத்தான்குடி மாணவி ஷுமைதா ஹினா முதலிடம் பெற்றார்
– புவி எம் ஐ ரஹ்மதுல்லலாஹ் காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி வலய பிரிவில் அமைந்துள்ள காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் தரம் 09ல் கல்வி பயிலும் மாணவி
-
எமக்குள் இருக்கம் கருத்து முரண்பாடுகளை களைந்து சமூகத்தின் விமோசனத்திற்காக செயற்படுவோம்: அமைச்சர் றிசாத் பதியுதீன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுவதாகவும் இது தொடர்பில் நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் எமக்குள் இருக்கம் கருத்து முரண்பாடுகளை களைந்து சமூகத்தின் விமோசனத்திற்காக செயற்படுவோம் என்றும் தெரிவித்தார்.
-
“இனவாதமும் பிரதேச வாதமுமே நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் சாபக்கேடுகாளகும்”: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்
NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: “நமது முன்னேற்றத்திற்கு தடையாக நம்மை பீடித்திருக்கும் இரண்டு சாபக்கேடுகள் இருக்கின்றன. நம் மத்தியில் நிலவும் பிரதேசவாதம் மற்றும் இனவாதம் என்பனவே அந்த சாபக்கேடுகளாகும். இவற்றிலிருந்து மீண்டு வந்தால் மாத்திரமே நமது சமூகங்கள் முன்னேற முடியும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
தாருஸ்ஸலாமின் ‘ஸலாமிய்யா’ எனும் புத்தக வெளியீட்டு வைபவம்
எம்.ரீ.எம்.பாாிஸ் மட்டக்களப்பு: மட்டக்களப்பு பிறைந்துரைச்சேனைப் பிரதேசத்தில் இயங்கி வரும் தாருஸ்ஸலாம் குர்ஆன் கலாசாலை நான்கு ஆண்டுகள் நிறைவினை ஒட்டி ‘ஸலாமிய்யா’ எனும் துஆ புத்தக வெளியீட்டு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (01) அன்று மத்ரஸா வளாகத்தில் மிகச்சிறப்பாக நடை பெற்றது.