மட்டக்களப்பு: மட்டக்களப்பு பிறைந்துரைச்சேனைப் பிரதேசத்தில் இயங்கி வரும் தாருஸ்ஸலாம் குர்ஆன் கலாசாலை நான்கு ஆண்டுகள் நிறைவினை ஒட்டி ‘ஸலாமிய்யா’ எனும் துஆ புத்தக வெளியீட்டு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (01) அன்று மத்ரஸா வளாகத்தில் மிகச்சிறப்பாக நடை பெற்றது.
கலாசாலையின் தலைவர் AUM. நளீம் (ஸலாமி) அவர்களின் தலைமையில் நடை பெற்ற நிகழ்வின் அதிதிகளாக் அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறுன் (ஸஹ்வி) முஸ்லிம் சமய திணைக்கலத்தின் கிழக்குமாகாண பொறுப்பாளர் ஜீனைட் (நளீமி) கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எம். ஆப்தீன், மௌலவிமார்களான முஸ்தபா (ஸலாமி) றியாஸ் (ஸஹ்வி) முபிஸ் (சிறாஜி) நபீல் (சிறாஜி) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குர்ஆன் கலாசாலையின் ஆலிம்களான எம்.ஐ. அஸ்பாக் பீ.எம். ஜிந்தாஸ் (ஸலாமி) எம்.எச்.எம் அஸ்மத் (மஸ்ஊதி) ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடை பெற்ற நிகழ்வில் 90 மாணவர்களுக்கு அன்றாட துஆகள் அடங்கி புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கலாசாலையில் கற்பிக்கும் உஸ்தாத் மார்களுக்கான ஊக்குவிப்புக்களும் வழங்கப்பட்டதுடன் வறிய மாணவர்களின் நன்மை கருதி அல்குர்ஆன் பிரதிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment