முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

arrestஎம்.ஐ. அப்துல் நஸார்

கொழும்பு: முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யபட்டதாக பொலீஸ் நிதி மோசடி விசாணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சதோச நிறுவனத்திலிருந்து ஐம்பது இலட்ச ரூபா பெறுமதியான பொருட்களை பெற்று அதற்கான கொடுப்பனவை செலுத்தத் தவறியமை சம்பந்தமாக வாக்குமூலம்மொன்றைப் பெறுவதற்காக இன்று (5) நிதி மோசடி விசாணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஐந்து மணிநேரம் வாக்கு மூலம் பெறப்பட்டதன் பின்னர் பிற்பகல் 3.20 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக உயர் பொலீஸ் அதிகாரியொருவர் தெரிவத்தார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பவுள்ளார்.

Published by

Leave a comment