Author: yourkattankudy.com
-
அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்
கொழும்பு: அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை தாம் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, முதல் முறையாக ஆர். சம்பந்தன் சபையில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதாக அறிவித்தார்.
-
உலக மக்களை கண்ணீரால் நனைத்த பாலகனின் புகைப்படம்! ( புகைப்படம், காணொளி)
வியன்னா: ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்றை புகைப்படம் ஒன்று சொல்லி விடும். வியட்னாம் போர், ஆபிரிக்காவின் வறுமை என்பன இதற்கு சான்று. இந்நிலையில் பார்ப்பவர்களின் மனதை நிலைகுலைய வைக்கும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகி உலக மக்களை துயருற வைத்துள்ளது.சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக ஐரோப்பாவிற்கு அகதியாக செல்ல முயன்ற போது, படகு விபத்துகுள்ளாகி மத்தியதரைகடலில் முழ்கி இறந்து போன குழந்தை ஒன்றின் புகைப்படமே இது.
-
“கட்சியின் அமைப்பாளர் பதவியை தாங்கள் பெறவேண்டும்” சிப்லி பாரூக்கிடம் மக்கள் வேண்டுகோள்
ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: தேர்தலுக்கு பின்னரான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்- ஆதரவாளர்கள் சந்திப்பும் எதிர்கால நகர்வும், காத்தான்குடியில் வாக்களித்த மக்களுடனான சந்திப்பும், உயர்பீட கூட்டமும் கட்சியின் வளர்ச்சிக்கான அபிப்பிராய ஆசிக் கருத்துக் கூட்டமும், அன்மையில் காத்தான்குடியில் நடைபெற்றது. இதன் போது அங்கு கலந்து கொண்ட மக்கள் தங்களது கருத்துக்களை மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களிடம் கூறியதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
-
BusyLanka Project – 2020 அறிமுக நிகழ்வு
– BusyLanka ஊடகப் பிரிவு காத்தான்குடி: BusyLanka Project – 2020 யின் அறிமுக நிகழ்வானது காத்தான்குடி MySoft-2U நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ( 02.09.2015 ) இடம்பெற்றது. இதில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட BusyLanka நிறுவனத்தின் பிரமதம அதிகாரி – கே.எம். மஸாஹிம் , ஒரு நீண்டகால திட்டமிடல் அடிப்படையில் தொடர்ச்சியாக முயற்சி செய்வதன் மூலம், எவ்வாறு வெற்றிகளைச் சாத்தியப்படுத்த முடியும் என்பது பற்றி, இளைஞர்களுக்கு விளக்கமளித்தார்.
-
‘சட்டமும் ஒழுங்கும் தாய்நாட்டின் உயிர் மூச்சு’ எனும் எனும் தொனிப்பொருளில் 149 வது பொலிஸ் தினம்: காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் அனுஷ்டிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘சட்டமும் ஒழுங்கும் தாய்நாட்டின் உயிர் மூச்சு’ எனும் எனும் தொனிப்பொருளில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149 வது பொலிஸ் தினம் 03-09-2015 இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கமைவாக காத்தான்குடி பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த 149 வது பொலிஸ் தின நிகழ்வு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
-
“குரங்கை போன்று நாடகமாட வேண்டாம் இது முன்னைய பாராளுமன்றம் இல்லை”: பிரதமர் ரணில்
கொழும்பு: குரங்கை போன்று நாடகமாட வேண்டாம். முன்னைய பாராளுமன்றத்தை போன்று தற்போதைய பாராளுமன்றத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க சபையில் தெரிவித்தார்.எதிர்க் கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்தார்.
-
பாடசாலை மாணவர்கள் தரம் ஒன்று அனுமதியும் பெற்றோர் கவலையும்
– ஏ.எல். டீன்பைரூஸ் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட பல ஊட்டற் பிரதேச எல்லைக்குள் வதியும் மாணவர்களின் பாடசாலை தரம் ஒன்று அனுமதி விடயத்தில் பல்வேறுபட்ட பிரச்சிசினைகள் காணப்படுவதாக பல முறைப்பாடுகளை,கவலைகளை பொற்றோர் சமூகம் தெரிவித்திருந்த போதிலும் அவற்றிக்கான ஒரு நிரந்தர் தீர்வு இல்லாது இருந்த வேளையில் தற்போது மட்டக்களப்பு மத்தி வலயம் வலயக்கல்வி பணிப்பாளர் ஊடாக தீர்வு கிடைக்கப்பெற்று இருப்பது பொற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
-
எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன்: 32 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர்!
கொழும்பு: எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான ஆர். சம்பந்தன் கடந்த தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
-
புதிய அமைச்சரவை நாளை: எண்ணிக்கைகளை அதிகரிக்க இன்று பிரேரணை
கொழும்பு: புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை காலை 11.00 மணிக்கு பதவி ஏற்க இருக்கிறது. ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 45 பேர் புதிய அமைச்சரவை அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பதாக அறிய வருகிறது. அமைச்சர் தொகை இன்றைய (03) பாராளுமன்ற அமர்வின் போது தீர்மானிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார்.
-
“தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் பாராளுமன்றத்துக்கு வேண்டாம்”: உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு
கொழும்பு: தேர்தலில் தோல்வியடைந்த 11 வேட்பாளர்களை தேசியப்பட்டியல் எம்.பிக்களாக பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படுவதை பலமிழக்கச் செய்யுமாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டியூ.குணசேகர, உச்சநீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல்செய்தார். இதேபோன்று, சரியான முறைகளுக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினராக தம்மை நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவிடுமாறும் இந்த மனுமூலம் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுள்ளார்.
-
2020 இல் காசாவில் வாழ முடியாத சூழல்
ஜெனீவா: யுத்தங்கள் மற்றும் இஸ்ரேலின் ஒரு தசாப்த கால முடக்குதலுக்கு முகம் கொடுத்திருக்கும் காசாவில் இந்த நிலைமை தொடர்ந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மனிதர்களால் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. ‘சனத்தொகை அடர்த்தி மற்றும் சனநெரிசல் கொண்ட பகுதியில் சமூக, சுகாதார மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக 2020 ஆம் ஆண்டாகும்போது காசாவில் வாழ முடியாத நிலை ஏற்படும்”
-
இலங்கையில் குறைந்து வரும் திருமணங்கள்
கொழும்பு: இலங்கையில் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான கடந்த 4 ஆண்டு காலத்தில் நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு 2 லட்சத்து 314 பதிவு திருமணங்கள் நடந்துள்ளன. 2012 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 710 பதிவு திருமணங்கள் நடந்துள்ளன.