காத்தான்குடி: BusyLanka Project – 2020 யின் அறிமுக நிகழ்வானது காத்தான்குடி MySoft-2U நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ( 02.09.2015 ) இடம்பெற்றது. இதில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட BusyLanka நிறுவனத்தின் பிரமதம அதிகாரி – கே.எம். மஸாஹிம் , ஒரு நீண்டகால திட்டமிடல் அடிப்படையில் தொடர்ச்சியாக முயற்சி செய்வதன் மூலம், எவ்வாறு வெற்றிகளைச் சாத்தியப்படுத்த முடியும் என்பது பற்றி, இளைஞர்களுக்கு விளக்கமளித்தார்.
மேலும், கிழக்கு மண்ணில் ஒரு தொழில் புரட்சியை உருவாக்குவதற்கான ஆரம்ப புள்ளியாக BusyLanka Project – 2020 என்ற ஐந்தாண்டு கால திட்டம் முக்கியத்துவம் பெறும் என்றும்,
எமது திட்டங்கள் இன, மொழி, மத, பிரதேச வாதங்களைக் கடந்து அனைத்து மக்களையும் அரவணைத்து வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்வதாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.
BusyLanka Project – 2020 அறிமுக நிகழ்வு
இத் திட்டத்தினை செயற்படுத்த ஆரம்ப கட்ட தேவையாக சுமார் ஒரு கோடி ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், குறைந்த முதலீட்டில் அதிகளவு வருவாயினை ஈட்டக்கூடிய தொழில் துறைகள் தொடர்பில் தான் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது இறைவன் உதவியால் வெற்றியளிக்கும்போது, குறைந்தது 100 இளைஞர்கள் உள்ளக வேலைவாய்ப்பையும் சுமார் 1,000 பேர்கள் சுய தொழில்வாய்ப்பையும் பெறுவதன் மூலம் சுமார் 10,000 க்கு மேற்பட்ட குடும்பங்களும், நிறுவனங்களும் பலனடையும் என தான் நம்புவதாக மேலும் அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டம் தொடர்பில், தான் கட்டம் கட்டமாக அனைத்து தனியார் மற்றும் அரச துறை பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.
மேலும், இன்று தனியார் துறையில் சிறந்த சம்பளத்தை எதிர்பார்த்து தலைநகருக்கு அல்லது வெளிநாட்டுக் செல்லும் இளைஞர்களுக்கு ஒரு மாற்றுவழியாக BusyLanka Project – 2020 அமையுமென்றும்,
இவ்வாறானதொரு பாரிய நீண்டகால மக்கள் நலன்பேணும் திட்டமொன்றை தனியார் துறை ஆரம்பித்து இருப்பது கிழக்கு மண்ணின் வரலாற்றில் இதுவே முதல் தடவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ் அறிமுக நிகழ்வானது மிக எளிமையாக ஒழுங்கு செய்யப் பட்டிருந்தாலும், இதனது பிரமாண்டத்தை தொடர்ந்து வரும் காலங்களில் கண்டுகொள்ள முடியும் என்றும், இத் திட்டத்தின்மூலம் சொந்தக்காலில் நிற்கக்கூடிய தன்னம்பிக்கை உள்ள ஒரு இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதே தனது பிரதான குறிக்கோள் என்றும் மேலும் குறிப்பிட்டார்.
Leave a comment