காத்தான்குடி: ‘சட்டமும் ஒழுங்கும் தாய்நாட்டின் உயிர் மூச்சு’ எனும் எனும் தொனிப்பொருளில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149 வது பொலிஸ் தினம் 03-09-2015 இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கமைவாக காத்தான்குடி பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த 149 வது பொலிஸ் தின நிகழ்வு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
இதன் போது காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தலைமையில் பொலிஸ் கொடி ஏற்றப்பட்டு பொலிஸ்; அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149 வது பொலிஸ் தினம் பற்றி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் பொலிசாருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இங்கு பொலிஸ் தினத்தை நினைவு கூறும் வகையில் மரங்களும் நடப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி துஷார ஜெயலால்,குற்றத்த தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உட்பட ஆண்,பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by




Leave a comment