ஜெனீவா: யுத்தங்கள் மற்றும் இஸ்ரேலின் ஒரு தசாப்த கால முடக்குதலுக்கு முகம் கொடுத்திருக்கும் காசாவில் இந்த நிலைமை தொடர்ந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மனிதர்களால் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. ‘சனத்தொகை அடர்த்தி மற்றும் சனநெரிசல் கொண்ட பகுதியில் சமூக, சுகாதார மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக 2020 ஆம் ஆண்டாகும்போது காசாவில் வாழ முடியாத நிலை ஏற்படும்”
என்று வர்த்தக மற்றும் அபிவிருத்திக்கான ஐ.நா. அமைப்பின் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல், எகிப்து மற்றும் மத்திய தரைக் கடலுக்கு இடைப்பட்ட 362 சதுர கிலோமீற்றர் கொண்ட ஒரு சிறு நிலப்பகுதியான காசாவில் சுமார் 1.8 மில்லியன் பலஸ்தீனர்கள் வாழ்கின்றனர். இது உலகில் அதிக சனத்தொகை அடர்த்தி கொண்ட பகுதியாகவும் கருதப்படுகிறது.
Published by


Leave a comment