புதிய அமைச்சரவை நாளை: எண்ணிக்கைகளை அதிகரிக்க இன்று பிரேரணை

parliament[1]கொழும்பு: புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை காலை 11.00 மணிக்கு பதவி ஏற்க இருக்கிறது. ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 45 பேர் புதிய அமைச்சரவை அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பதாக அறிய வருகிறது. அமைச்சர் தொகை இன்றைய (03) பாராளுமன்ற அமர்வின் போது தீர்மானிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார்.

19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அமைச்சரவை தொகை 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு ஐ.தே.க. சு.க. இணைந்த தேசிய நல்லிணக்க அரசாங்கம் ஸ்தாபிக்கப்படவுள்ளதால் அமைச்சுக்களின் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தொகை தொடர்பில் இன்றைய விவாதத்தின் போது முடிவு செய்யப்படும்.

அமைச்சர் தொகையை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை ஆளும் தரப்பி னால் சமர்ப்பிக்கப்பட இருப்பதோடு இது தொடர்பான விவாதம் காலை 9.30 மணி முதல் 6.30 மணி வரை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறை வேற்றப்பட்ட பின்னர் புதிய அமைச்சரவை நாளை பதவி ஏற்கிறது. 45 ஆக அமையும் என எதிர்பார்க்கப் படும் அமைச்சரவையில் ஐ.தே.க. சார்பில் 30 பேரும் சு.க. சார்பில் 15 பேரும் நியமிக்கப்பட இருப்பதாக அறிய வரு கிறது. ஏற்கனவே 03 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment