Author: yourkattankudy.com
-
40 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இறைத்தூதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஈரானில் பெரும் வரவேற்பு!
தெஹ்ரான்: முஹமது நபியின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட ஷியா முஸ்லிம் நாடான ஈரானிய திரைப்படம் அங்கு பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அரபு உலகின் ஒருசில சுன்னி முஸ்லிம் மதத் தலைவர்கள் அந்த திரைப்படத்தை தடை செய்யுமாறு ஈரானை வலியுறுத்தியுள்ளனர்.
-
இலங்கை வீரர்களுடன் மோதல்.. இஷந்த் ஷர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடை
இலங்கை-இந்திய வீரர்களுக்குரிய போட்டி தடைகளும், அபராதங்களும் – SHM கொழும்பு: கடந்த டெஸ்ட் போட்டியின்போது இலங்கை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட இந்திய வீரர் இஷாந்த ஷர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இலங்கை வீரர் சண்டிமாலுக்கு ஒரே ஒரு நாள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான நேற்று இந்திய வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கும் இலங்கை வீரர் தம்மிக்கா பிரசாத் ஆகியோருக்கும் இடையே கடும்…
-
மூன்று தசாப்தங்களின் பின்னர் நாடாளுமன்றிற்கு தெரிவான தம்பதியினர்!
கொழும்பு: மூன்று தசாப்த கால இடைவெளியின் பின்னர் இலங்கைய நாடாளுமன்றிற்கு கணவனும் மனைவியும் செல்லும் முதல் சந்தர்ப்பம் இன்று பதிவாகியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட தயா கமகே மற்றும் தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட அனோமா கமகே ஆகியோர் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
-
திருமணத்துக்கு வெளியில் பாலுறவு; இருவருக்கும் தலா 100 கசையடிகள்
காபூல்: ஆப்கானிஸ்தானில் நீதிமன்றம் ஒன்று ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்கும் தலா நூறு கசையடிகள் வீதம் தண்டனை அளித்துள்ளது. 20-24 வயதுகளுக்கு உட்பட்ட இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள இந்த கசையடி தண்டனை ஆப்கானிய சட்டங்களுக்கு முரணானது. திருமணத்துக்கு வெளியில் பாலுறவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டிருந்த இருவருக்கும் கசையடி வழங்கி தண்டனை நிறைவேற்றியதாக மத்திய மாகாணமான கோர்-இல் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருவரும் திருமணம் புரியாதவர்கள்.
-
எல்லோரும் ஏற்கக்கூடிய அரசியல்யாப்பு இல்லாதது துரதிர்ஷ்டவசமானது: ஜனாதிபதியின் இன்றைய பாராளுமன்ற உரை
கொழும்பு: இன்று நாடாளுமன்ற கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றிய சிறிசேன, யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டை கட்டி எழுப்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டாலும் இரு பிரதான கட்சிகளுக்கிடையே நிலவிய முரண்பாடுகளின் காரணமாக அந்த வாய்ப்பு கைவிடப்பட்டதாகத் தெரிவித்தார்.தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்ததாகவும் இதன்படி புதிய நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் சிறிசேன கூறினார்.
-
அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவுக்கு ஓர் மடல்
AM.பர்ஸாத், C 13/4, தக்வா வீதி, புதிய காத்தான்குடி-03. 31.08.2015 தலைவர்/ செயலாளர், அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா, அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 16 சிறிய குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் புனரமைப்பு, சிறுதானிய விதைகள் விநியோகம் என்பன 157.6 மில்லியன் செலவில் ஐக்கிய நாடுகளின் உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் புனரமைக்கப்படவுள்ளன.
-
பிரதி சபாநாயகர் திலங்க, குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம்
கொழும்பு: 8வது பாராளுமன்றின் பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திலங்க சுமதிபாலவின் பெயரை ரவுப் ஹக்கீமும் செல்வம் அடைக்களநாதனின் பெயரை சுமந்திரனும் முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.
-
புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு
கொழும்பு: 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்பட்டதுடன், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அதனை வழிமொழிந்தார்.
-
ஒரே மேடையில் தோன்றவுள்ள மைத்திரி, சந்திரிகா மற்றும் மஹிந்த!!!
பொலனறுவை: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்க உள்ளார்.எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி பொலனறுவையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக பொலனறுவையில் நடைபெறும் இந்த ஆண்டு நிறைவு நிகழ்வு மற்றும் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
-
“பிரபாகரன் தற்கொலை செய்யவில்லை”: கருணாவின் கூற்றை நிராகரிக்கிறார் சரத் பொன்சேகா
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது கைத்துப்பாக்கியை கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கருணா அம்மன் கூறியிருப்பதை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.பிரபாகரனின் தலையில் வீழ்ந்த காயத்தை பார்க்கும்போது அவருடைய ஒருபுற மண்டையோடு வெளியேறியிருந்தது.
-
“ஃபேஸ்புக்கைவிட தொழுகை சிறந்தது” – எகிப்தில் பாங்கை மாற்றிச் சொன்ன முஅத்தின்
கெய்ரோ: எகிப்தில் பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைக்கும் பாங்கை காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கூறிய பள்ளிவாசல் ஊழியர் ஒருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விடியற்காலை நேரத்து “சுபுஹ்” தொழுகைக்கு அழைக்கும் பாங்கில், “தூக்கத்தைவிட விட தொழுகை சிறந்தது” என்ற வாசகம் வரும்.