Author: yourkattankudy.com
-
எவன்கார்ட் விவகாரம்:பொலிஸ், கடற்படை மாறுபட்ட கருத்துகள்
கொழும்பு: சர்ச்சைக்குரிய எவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் கடற்படையினரும், பொலிஸாரும் முன்னுக்குப் பின் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திலிருந்த ஆயுதங்களின் தொடர் இலக்கங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர கூறியுள்ளார்.
-
லண்டன் பிக் பென் கடிகார மணியோசை நிறுத்தப்படுகிறது
லண்டன்: உலக அளவில் நன்கு அறியப்பட்ட லண்டன் “பிக்பென் ” (Big Ben) என்று அழைக்கப்படும் மணிக்கூண்டு கோபுர கடிகாரத்தின் மணியோசை நிறுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்குகிறது. தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் வானுயர் மணிக்கூண்டு கோபுரம் மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதாகவும், உடனடியாக அதற்கு பராமரிப்புப் பணிகள் செய்யவேண்டிய அவசரம் ஏற்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்று பரிந்துரை செய்திருக்கிறது.
-
சக்தி யூ ரிப்போர்டர்ஸ் செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது
– எம்.எச்.எம். அன்வர் மட்டக்களப்பு: கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் அனுசரணையில் சக்தி யூ ரிப்போட்டர்ஸ் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அமல் வியாமேந்திரன் கலந்து கொண்டார். கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த செய்தித்துறையில் ஆர்வமுள்ள இளம் யூ ரிப்போர்டர்ஸ் கலந்துகொண்டனர்.
-
பாலமுனை வைத்தியசாலை வைத்தியர்களின் இன்றைய போக்கு – முன்னாள் தவிசாளர் அன்சில் கண்டனம்
சப்னி அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ அன்சில் பாலமுனை வைத்தியசாலையின் நிலை பற்றிய விளக்கம்மொன்றை மக்களுக்காக வழங்கியுள்ளார். சம்பவம்: இத்தனைக்குப் பிறகும் நேற்று இரவு 11.00 மணிக்கு நமது பாலமுனை வைத்தியசாலைக்குச் சென்றேன். அங்கு வைத்தியர் கடமையில் இல்லை.இரவு 8.00 மணியிலிருந்தே வைத்தியர்கள் கடமையில் இல்லை என்பதோடு இனிமேலும் வரமாட்டார்கள் என்று கூறப்பட்டது. சுகாதாரப் பிரதியமைச்சரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் இந்த வைத்தியசாலைக்கு வந்தபோது
-
“மைத்திரியைக் கொலை செய்வதற்கு எனது உதவியை மகிந்த நாடினார்”- பிள்ளையான்
கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானின் உதவியை நாடியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
48 வருடமாக பிரிட்டனில் வாழ்ந்த பெண்ணுக்கு வெளியேறும் அச்சுறுத்தல்
லண்டன்: ஐக்கிய இராச்சியத்தில் 48 வருடங்களாக வாழ்ந்துவரும் பெண் ஒருவரை தொடர்பு கொண்ட பிரித்தானிய உள்துறை அலுவலகம், குறித்த பெண் தற்போது சட்டவிரோத குடியேறியாக கருதப்படுவதாகவும், ஆதலால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்படலாம் எனவும் அறிவித்துள்ளது.லன்காஷயரில் – பேர்ன்லி என்ற இடத்தை சேர்ந்த வின்னி பேர்க்கின்ஹெட், 1967 இல் மலேஷியாவிலிருந்து தனது தாயுடன், தாயின் கடவுச்சீட்டில் பதியப்பட்டு, அவருடன் வந்துள்ளார்.
-
“அதிபர்கள் பாடசாலையின் முகாமையாளர்கள் இவர்கள் முறையாக வழி நடத்த வேண்டும்”- லாகீர்
ரைஸ் மூதூர்: பாடசாலையின் அதிபர்கள் அதன் முகாமையாளர்கள் அதன் கருமங்கள் அனைத்தையும் முறையாக முகாமை செய்ய வேண்டும் என மூதூரில் நடைபெற்ற சந்திப்பொன்றில் சட்டத்தரணியும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஜே.எம்.லாகீர் தெரிவித்தார்.
-
இந்தியா: வெட்கக்கேடான மற்றுமொரு சம்பவம்
டில்லி: 2 1/2 வயது சிறுமி ஒருவரை நேற்று (16) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்திச் சென்றதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், குறித்த சிறுமி அவரது வீட்டிற்கு அருகிலுள்ள பூங்கா ஒன்றிலிருந்து சுயநினைவின்றிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இந்தியாவின் மேற்கு டில்லியில் இடம்பெற்றுள்ளது.
-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு தேவைகள் அதிகம் உள்ளது
எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் அங்கத்தவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு (16.10.2015) விஜயம் செய்து வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் மற்றும் நிவர்த்தி செய்யப்பட்டவை தொடர்பாக வைத்திய அத்தியட்சகர் Dr. எம்.எஸ்.எம்.ஜாபிர் அவர்களை சந்தித்து சினேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
-
உஸ்தாத் மன்ஸூர் எழுதிய குர்ஆனிய சிந்தனை நூல் வெளியீட்டு விழா காத்தான்குடியில்
ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி சமாதான ஒன்றியம் ஏற்பாடு செய்த உஸ்தாத் மன்ஸூர் எழுதிய குர்ஆனிய சிந்தனை தப்ஸீர் நூல் வெளியீட்டு விழா றாபிதத்தூன் நளீமிய்யீன் உடைய தலைவர் அஷ்ஷெய்ஹ் எஸ்.ஏ.கே. அப்துர் றாசீக் (நளீமி) தலைமையில் 16.10.2015 வெள்ளியிரவு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம் பெற்றது.
-
“மெகி நூடுல்ஸ் பாதுகாப்பானது”- நெஸ்லே
மும்பை: இந்தியாவில் மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகளில், மெகி நூடுல்ஸ் பாதுகாப்பானது தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மெகி நூடுல்ஸை தயாரித்து விற்கும் நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.மெகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே காரீயம் காணப்படுவதாக மூன்று வெவ்வேறு ஆய்வுக் கூடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், பல்வேறு காலகட்டங்களில் தயாரிக்கப்பட்டிருந்த 90 மாதிரிகளில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
-
கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை
கொழும்பு: முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் கருணாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவிற்கு கருணா அண்மையில் அழைக்கப்பட்டு நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.