- எம்.எச்.எம். அன்வர்
காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் அங்கத்தவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு (16.10.2015) விஜயம் செய்து வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் மற்றும் நிவர்த்தி செய்யப்பட்டவை தொடர்பாக வைத்திய அத்தியட்சகர் Dr. எம்.எஸ்.எம்.ஜாபிர் அவர்களை சந்தித்து சினேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது பின்வரும் குறைபாடுகள் நிலவுவதாகவும் நிவர்த்தி செய்து தர முன்வருமாறும் அவர் தெரிவித்தார்.
தேவைகளும் குறைபாடுகளும்:-
01. 480 மில்லியன் ரூபாய் செலவில் Norvagian red cross நிதி உதவியுடன் சீரா நிறுவனத்தினால் கட்டப்பட்ட இவ்வைத்தியசாலையினை இதுவரையிலும் கையளித்தமைக்கான எந்த ஆவணமும் என்னிடம் தரப்படவில்லை எனத்தெரிவித்தார்
02.ஆதார வைத்தியசாலைக்குரிய ஆளணி மற்றும் பௌதீக வளங்கள் இன்னும் ஒதுக்கப்படவில்லை
03.ஆளணிப்பற்றாக்குறை நிலவுகின்றது இங்கு மொத்த ஆளணி 210 தேவை இதில் 126 ஊழியர்களே கடமைபுரிகின்றனர்
04.இவ் ஆதார வைத்தியசாலைக்கு 30 வைத்தியர்கள் தேவை ஆனால் 13 வைத்தியர்களே கடமைபுரிகின்றனர்
05.இங்கு இரத்த வங்கி இல்லை, scan unitக்கான ஆளணி வெற்றிடம் உள்ளது, UTU வைத்தியர் ஒருவர், UTU ஒருவர், பொதுச்சுகாதார மருத்துவ மாதுக்கள் தேவையுள்ளதாகவும்
06 ஈ சி ஜி எடுப்பதற்கான உத்தியோகத்தர் இல்லை எனவும் ஆனால் மாவட்டத்திலுள்ள ஏனைய ஆதார வைத்தியசாலைகளுக்கு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்
07.கட்டடம் மழை காலங்களில் ஒழுகுவதால் நோயாளிகளை வைத்திருப்பதில் மிகவும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்ததுடன்
இது தவிர
இங்குmulty media system, sound system, refirigerator, air condition வசதி தேவையுள்ளது எனவும் தெரிவித்தார்
அத்துடன் மிக அவசரமாக பெட்சீட்- 300, நோயாளிகளுக்கான கட்டில் -150 மேலதிகமாக அம்பியூலன்ஸ் வண்டி 01, partition வேலை செய்யப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் மேலதிகமாக வைத்தியசாலைக்கான கட்டடம் கட்டுவதற்கு இடம் இல்லை எனவும் ஏதும் கட்டடம் கட்டுவதாயின் அருகிலுள்ள நிலத்தினை கொள்வனவு செய்ய சிவில் சமூகம் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் உளநலப்பிரிவுக்கான கட்டடம் கட்டப்பட்டபோதிலும் இதற்கான குறை வேலைகள் நிலவுவதாகவும் இதற்காக 3 லட்சம் வரை செலவு செய்து இக்கட்டடத்தினை அவசரமாக திறக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவித்தார்.
தான் வைத்திய அத்தியட்சகராக கடமையேற்று வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் உதவியுடன் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் தற்போதய ராஜாங்க அமைச்சர் எம்.எல் ஏ எம் ஹிஸ்புல்லா இவ்வைத்திசாலைக்கு பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டதாகவும் தெரிவித்ததுடன்
இவ்வைத்தியசாலை அபிவிருத்திக்கு அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் நலன்விரும்பிகள் புத்திஜீவிகள் முன்வரவேண்டும் எனவும் இதற்கான பணியை காத்தான்குடி மீடியா போரம் முன்னெடுத்தமைக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
இது விடயமாக கலந்துரையாடிய மீடியா போரத்தினர் வைத்தியசாலையின் நலன்புரிச்சங்க வங்கிக்கணக்கிலத்தையும் இது விடயமாக தொடர்புகொள்ள வைத்தியசாலை இலக்கத்தையும் பெற்றுக்கொண்டது.
தொடர்புகளுக்கு 065 22 45561 / 065 20 55 333 (வைத்தியசாலை)
உதவ விரும்புவோர்:
kattankudy base hospital employees social welfare society
peoples bank, kattankudy branch
a/c 065 – 1 – 001 – 2 00 58 631
email :- bhkattankudy@gmail.com

Leave a comment