இந்தியா: வெட்கக்கேடான மற்றுமொரு சம்பவம்

Abuse-stop-childடில்லி: 2 1/2 வயது சிறுமி ஒருவரை நேற்று (16) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்திச் சென்றதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், குறித்த சிறுமி அவரது வீட்டிற்கு அருகிலுள்ள பூங்கா ஒன்றிலிருந்து சுயநினைவின்றிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இந்தியாவின் மேற்கு டில்லியில் இடம்பெற்றுள்ளது.

பல்வேறு காயங்களுடன் மீட்கப்பட்ட குறித்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளபோதும் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில், தனது வீட்டுக்கு அருகில் இடம்பெற்ற ‘இராமாயணம்’ நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த வேளையில், தனது மகளை கடத்தப்பட்டதாக, குழந்தையின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இது வரை இது குறித்து எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த தினத்தில் (16) கிழக்கு டில்லியில், வீடொன்றில் தனிமையில் இருந்த 5 வயது சிறுமியை, அயல்வீட்டிலிருந்த ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, தனது நண்பர்கள் இருவருடன், குறித்த குழந்தையை பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை, கூக்குரலிட்டு அழுதவாறு குறித்த நபரின் வீட்டிலிருந்து வருவதை தாங்கள் அவதானித்ததாக அயல் வீட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரையும் பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment