– எம்.எச்.எம். அன்வர்
மட்டக்களப்பு: கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் அனுசரணையில் சக்தி யூ ரிப்போட்டர்ஸ் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அமல் வியாமேந்திரன் கலந்து கொண்டார். கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த செய்தித்துறையில் ஆர்வமுள்ள இளம் யூ ரிப்போர்டர்ஸ் கலந்துகொண்டனர்.
மேற்படி நிகழ்வில் திறமையாக செய்திகளை அனுப்பிய யூ ரிப்போர்டர்ஸ் 3 பேர் மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment