எவன்கார்ட் விவகாரம்:பொலிஸ், கடற்படை மாறுபட்ட கருத்துகள்

ship gotaகொழும்பு: சர்ச்சைக்குரிய எவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் கடற்படையினரும், பொலிஸாரும் முன்னுக்குப் பின் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திலிருந்த ஆயுதங்களின் தொடர் இலக்கங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர கூறியுள்ளார்.

இது இவ்விதமிருக்க எவன் கார்ட் வழக்கை ஆயுத சட்டத்தின் கீழ் அன்றி பணமோசடி சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். இது தொடர்பில் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இருந்தபோதும் விசாரணையை இடைநிறுத்துமாறு எந்தவொரு சந்தர்ப் பத்திலும் சட்டமா அதிபர் கூறவில்லை யென்றும், புதிதாக அதாவது தடயங்கள் கிடைத்தால் அதனை ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.

அதேநேரம், உறுதிசெய்யப்படாத எந்த வொரு ஆயுதங்களும் எவன் கார்ட் மிதக் கும் ஆயுதக் களஞ்சியத்தில் இருக்கவில்லை யென்பதைக் கடற்படைத் தளபதி பாது காப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். எனினும், குறித்த கப்பலில் இருந்த படகிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களும், ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த ஆவணங்களின் எண்ணிக்கையும் சமர்ப்பக்கப்பட வில்லையென பாதுகாப்பு அமைச்சின் உயரதியாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ship gota
எவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம்

இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அமைச்சில் விசேட கூட்ட மொன்று நடைபெற்றுள்ளது. இதில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி கள் மற்றும் கடற்படைத் தளபதி ஆகி யோர் கலந்துகொண்டிருந்தனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி வெளி நாடு சென்றிருப்ப தால் அவர் இதில் கலந்துகொள்ளவில்லை.

இது இவ்விதமிருக்க, காலி துறை முகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எவன்ட் கார்ட் கப்பலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றுமுன்தினம் சோதனையிட்டுள்ளனர். எவன்ட் கார்ட் விடயம் குறித்து முழுமையான விசா ரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குப் பணிப்புரை வழங்கப் பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், எவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட பிரதி செயலாளர் டி.எம்.எஸ். திசாநாயக்க விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய எவன்ட் கார்ட் மரிடைம் சேர்விஸ் நிறுவனத்தின் கப்பலை விடுவிக்குமாறு இவரே, கடற் படை தளபதிக்கு கடிதம் அனுப்பி யுள்ளார்.

குறித்த கப்பலை விடுவிப்பது தொடர் பில் கடிதமொன்றை வழங்குவதற்கு சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கின்றதா என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது.கடற்படையினர் தமது விசாரணை அறிக்கையை பாதுகாப்பு அமைச்சரிடம் நேற்றுக் கையளித்தது. கடற்படையினர் மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் அறிக்கைகள் கிடைத்ததும் குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதா என்பது பற்றி பாதுகாப்பு அமைச்சு தீர்மானிக்கும்.

Published by

Leave a comment