Author: yourkattankudy.com
-
நாட்டில் ஒருவித தோல் நோய் பரவுகிறது மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும்
கொழும்பு: பூச்சிகளால் பரவும் ஒருவிதமான தோல்நோய் நாடளாவிய ரீதியில் பரவிவருவதாக பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் எஸ்.ஏ.எம்.குலரத்ன தெரிவித்தார்.” லீஸ் – மெனய்சிஸ்” எனப்படும் குறித்த நோயைக் குணப்படுத்துவதற்கு சில நாட்களாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
-
உலகக் கிண்ண இருபதுக்கு – 20 அணிகளின் அட்டவணை அறிவிப்பு
டெல்லி: இந்தியாவில் எதிர்வரும் 2016 ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு – 20 போட்டியில் பங்குபற்றும் அணிகளின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இப் போட்டிக்கு 8 அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி முதலாவது குழுவில் இலங்கை, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
-
“என் கணவர் நாட்டுக்குத் தேடித்தந்த பெருமையை எந்தவொரு சிங்களவரும் பெற்றுக் கொடுக்கவில்லை” யசாரா மரிஜா
கொழும்பு: அநாவசிய தொந்தரவுகள் இன்றி தன்னை, தன்பாட்டில் வாழவிடுமாறு யசாரா அபேநாயக்க ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் புதல்வன் யோசித்த ராஜபக்ஷ மற்றும் படுகொலை செய்யப்பட்ட றக்பி வீரர் வசீம் தாஜுடீன் ஆகியோரின் முன்னாள் காதலி என்று அறியப்பட்டுள்ள யசாரா அபேநாயக்க, ஒரு வேண்டுகோளை வெளியிட்டுள்ளார்.
-
யெமன் பள்ளிக்கூடங்களை தெரிந்தே தாக்குகிறது சவுதி
லண்டன்: சவுதி அரேபியாவும் அதன் கூட்டணியும் யெமனில் வேண்டுமென்றே பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமை பிரச்சார அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நஷனல் குற்றஞ்சாட்டியுள்ளது. சவுதி தலைமையிலான கூட்டணி யெமனில் கடந்த மார்ச்சில் விமானத் தாக்குதல்களை ஆரம்பித்தது முதல் அந்நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகூடங்கள் இயங்கவில்லை என்றும், அவற்றில் கால்வாசி அளவானவை முற்றிலுமாக அழிந்துபோயுள்ளன என்றும் அவ்வமைப்பு கூறுகிறது.
-
தெல்தொட்டையில் காணி பகிர்வு இடைநிறுத்தம் – அமைச்சர் திகாம்பரம் நேரடியாகச் சென்று அதிரடி!
கண்டி: தெல்தோட்டை லிட்டில்வெலி தோட்டத்தில் முறையற்ற வகையில் இடம்பெற்றுவந்த காணி பகிர்வு நடவடிக்கை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் நேரடியாகச் சென்று தடுத்து நிறுத்தியுள்ளார்.
-
“காத்தான்குடி நகர சபை 12 வட்டாரங்களாக பிரிக்கப்பட வேண்டும்”: ஹிஸ்புல்லாஹ்
முகம்மட் சஜீ காத்தான்குடி: காத்தான்குடி நகர சபை 12 வட்டாரங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நேற்று எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழு முன் சமர்ப்பித்தார். எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வட்டாரங்கள் பிரிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் காத்தான்குடி நகர சபை தற்போது 10 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு வர்த்மானி மூலம் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.
-
உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்புக்கள் கூட இலஞ்சமாகும் – பிரதேச செயலாளர் சலீம்
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு பொருட்கள் கூட இலஞ்சமாகவே பார்க்கப்படுகின்றது. எனவே உத்தியோகத்தர்கள் இலஞ்சம், ஊழல் விடயங்களிலிருந்து தவிர்ந்து கொண்டு தங்களது சேவைகளை மக்களுக்கு வழங்குவதோடு தொழில்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டும் என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
-
தாஜுதீனின் உடலுறுப்புகள் மாயம்!!
கொழும்பு: கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அலுவலக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த ரகர் வீரர் வசீம் தாஜுதீனின் உடலுறுப்புகள் மாயமாக மறைந்தமைக்கு, தான் எந்த நிலையிலும் சம்பந்தப்படவில்லை என முன்னாள் கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரியான பேராசிரியர் ஆனந்த சமர சேக்கர செவ்வாய்க்கிழமை (08) கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி நிசாந்த பீரிஸ் முன்னிலையில் தெளிவுபடுத்தினார்.
-
ஓ.எல். மாணவர்களை “விலை” வைக்கும் ரியூட்ரிகளும் ஆசிரியர்களும்
காத்தான்குடி: தற்பொழுது க.பொ.த. சா/த பரீட்சை இடம்பெற்று வருகின்றது. “11 வருடங்கள் கல்வி கற்றதன் பிரதிபலன் இந்தப் பரீட்சையின் முடிவில் தங்கி இருக்கின்றன” எனும் ஆசான்களின் கண்டிப்பிலும், பெற்றோர்களின் எதிர்பார்ப்பிலும் மாணவர்கள், கடந்த 11 வருடங்கள் கற்ற புத்தக சுமையை பரீட்சைத் தாள்களில் இறக்கிவைக்கின்றனர்.
-
மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்ப சிந்திக்கும் ஸ்மித்
கெப்டவுண்: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் அணியாக இருக்கும் தென்ஆபிரிக்கா இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்று நாட்களுக்குள் முடிந்தது. இது தென்ஆபிரிக்காவின் முன்னாள் தலைவரும், தொடக்க ஆரம்பதுடுப்பாட்ட வீரருமான ஸ்மித்தை பெரிதும் பாதித்துள்ளது. இந்த தோல்வியால் நான் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்ப சிந்தித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
-
அரச ஊழியர்கள் ஐந்து வருட பூர்த்தியின் பின்னர் வாகனத்தைப் பெறலாம்
கொழும்பு: அரசாங்க ஊழியர்களின் வரிச் சலுகை வாகனக் கொள்வனவின் முதலாவது வாகனத்தை 5 வருட பூர்த்தியின் பின்னர் பெறலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தினால் ஒரு சில மாற்றம் கொண்டு வரப்பட்டதாக இன்று (09) ஶ்ரீ.ல.சு.க.வின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்தார்.
-
தாஜூதீன் கொலை: கமெராக்களில் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன!
கொழும்பு: ரகர் விளையாட்டு வீரர் மொஹமட் வசீம் தாஜூடீனை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பான சில காணொளிகள் ஆய்வுகளுக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த கொலை சம்பவம் தொடர்பாக அப்போதைய காவற்துறையினர் சரியான முறையில் விசாரணைகளை நடத்தாத காரணத்தினால், தற்போது நடத்தப்படும் விசாரணைகளில் பல சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.