லண்டன்: சவுதி அரேபியாவும் அதன் கூட்டணியும் யெமனில் வேண்டுமென்றே பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமை பிரச்சார அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நஷனல் குற்றஞ்சாட்டியுள்ளது. சவுதி தலைமையிலான கூட்டணி யெமனில் கடந்த மார்ச்சில் விமானத் தாக்குதல்களை ஆரம்பித்தது முதல் அந்நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகூடங்கள் இயங்கவில்லை என்றும், அவற்றில் கால்வாசி அளவானவை முற்றிலுமாக அழிந்துபோயுள்ளன என்றும் அவ்வமைப்பு கூறுகிறது.
சவுதி அரேபியா யெமனில் சர்வதேச விதி மீறல்களைச் செய்யப்பயன்படுத்துவதால், அந்நாட்டுக்கு ஆயுதங்கள் விற்பதை அமெரிக்காவும் பிரிட்டனும் நிறுத்த வேண்டும் என அம்னெஸ்டி குரல்கொடுத்துள்ளது.
யெமன் மோதல்களில் இதுவரை ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment