மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்ப சிந்திக்கும் ஸ்மித்

Graeme-Smith-AFP-640x480[1]கெப்டவுண்: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் அணியாக இருக்கும் தென்ஆபிரிக்கா இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்று நாட்களுக்குள் முடிந்தது. இது தென்ஆபிரிக்காவின் முன்னாள் தலைவரும், தொடக்க ஆரம்பதுடுப்பாட்ட வீரருமான ஸ்மித்தை பெரிதும் பாதித்துள்ளது. இந்த தோல்வியால் நான் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்ப சிந்தித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு முன் தென்ஆபிரிக்கா அணி வெளிநாட்டு மண்ணில் 9 ஆண்டுகளாக எந்த தொடரையும் இழந்ததில்லை.

Graeme-Smith-AFP-640x480[1]

இந்த பெருமைக்கு முன்னாள் தலைவர் ஸ்மித்துதான் முக்கிய காரணம். இவரது காலத்தில்தான் டெஸ்ட் தர வரிசையில் தென்ஆபிரிக்கா முதல் இடம் பிடித்து அசைக்க முடியாத அணியாக இருந்தது.

அதற்கு ஸ்மித், கலிஸ் ஆகியோரின் துடுப்பாட்டமும், ஸ்டெயினின் அபார பந்து வீச்சும்தான் காரணம்.

9 ஆண்டு சாதனையை இந்த அணி சிதைத்ததால்தான் ஸ்மித் ஆதங்கத்தில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment