Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை!

    கொழும்பு: அமைச்சர்கள், அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன பிரதானிகள் உள்ளிட்டோரின் வெளிநாட்டு விஜயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அமைச்சர்கள் எந்தவொரு வெளிநாட்டு விஜயத்தையும் மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

  • 11வது மாடியிலிருந்து குழந்தையுடன் விழுந்து இந்தியப் பெண் பலி: கணவர் கைது- துபாயில் சம்பவம்!

    – SHM துபாய்: துபாயில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் 11வது மாடியில் இருந்து குழந்தையோடு கீழே விழுந்த இந்தியப்பெண்ணும், குழந்தையும் பரிதாபமாக பலியாயினர். அவர்களின் மரணம் கொலையா, தற்கொலையா என விசாரித்து வரும் பொலீசார்,  சந்தேகத்தின் பேரில் இவ் இளம்பெண்ணின் கணவரைக் கைது செய்துள்ளனர்.

  • கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தத் தடை..!

    கொழும்பு: எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், கறுப்பு கொடிகளை இடுதல், பதாகைகளைகளை காட்சிப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.

  • ஹஜ் செல்ல ஏமாற்றப்பட்டோர் எழுத்து மூலம் அறிவியுங்கள்

    கொழும்பு: இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் செல்லும் இறுதி ஹஜ் குழு சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளசி தலைமையில் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. இம்முறை ஹஜ் கடமைக் காக 2240 பேர் இலங்கையிலிருந்து சென்றுள்ளனர்.

  • கனடாவின் முடிவு தவறானது

    கொழும்பு: இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்க கனேடிய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு முற்றிலும் தவறானதென வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கனடாவின் இந்த தீர்மானம், சர்வதேச நாடுகளிலிருந்து அதனை தனிமைப்படுத்தியுள்ளதே தவிர பொதுநலவாய மாநாட்டிற்கு எந்தவொரு பாதிப்பினையும் ஏற்படுத்தப் போவதில்லை யெனவும் அமைச்சர் நேற்று திட்டவட்டமாக கூறினார்.

  • 200வது டெஸ்ட்டுடன் ஓய்வு பெறுகிறார் சச்சின்

    – SHM மும்பை: 200வது டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறப் போவதாக லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. தனது ஓய்வு முடிவை வாரியத்திடம் சச்சின் தெரிவித்துள்ளார் என்று அது கூறியுள்ளது.கவாஸ்கரின் வாரிசாக புகழப்பட்ட சச்சின், இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

  • கனடாவைச் சேர்ந்த 82 வயது பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல்

    – SHM ஸ்டாக்ஹோம்: கனடாவைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோவுக்கு 2013ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளைத் தொடர்ந்து இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • புதிய பிரதி அமைச்சர்களாக ஒன்பது பேர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

    கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் புதிய பிரதி அமைச்சர்களாக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (10ம் திகதி) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இந்தப்  பதவிப்பிரமாண நிகழ்வு இன்று முற்பகல்  ஜனாதிபதி செயலகத்தில்  நடைபெற்றது.

  • மத்திய மாகாணசபை: ஆளுங்கட்சிக்குள் பிளவு

    கொழும்பு: இலங்கையின் மத்திய மாகாணசபை ஆரம்ப அமர்வின் போது மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எச்சரிக்கை விடுக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே அண்மையில் இடம்பெற்ற மத்திய மாகாணசபை தேர்தலில் வெற்றிப்பெற்றது.

  • ஓர் இஸ்லாமிய வாரிசை தன் வயிற்றில் சுமந்ததால் பரிதாபமாகக் கொல்லப்பட்டார் இளவரசி டயானா!

    – MJ லண்டன்: இங்கிலாந்து  இளவரசி டயானா தனது காதலருடன் காரில் பயணம் செய்த போது, பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க வேகமாகச் சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாகப் பலியானார் என்றுதான் உலகம் நம்பிக்கொண்டிருந்தது.

  • சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இயக்குனரிடம் மன்னிப்புக்கேட்டு, தனது புகாரை வாபஸ் பெற்றார் நடிகை நஸ்ரியா!

    – MJ சென்னை: ராஜா ராணியால் தனது அழகில் பல இளசுகளைக் கட்டுப்போட்டு வைத்திருந்த கேரளத்து பெண்குட்டி – இளம் நடிகை நஸ்ரியா, இயக்குநர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிர்வேல் மீது கொடுத்த புகாரை இன்று வாபஸ் பெற்றார் தனது தொப்புளைக் காட்டும் காட்சிக்கு அனுமதியில்லாமல் ‘டூப்’ போட்டு எடுத்தார் என சற்குணம் மீதும், கதிர்வேல் மீதும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறியிருந்தார் நஸ்ரியா.

  • தேசிய கல்வியற் கல்லூரியில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

    பழுளுல்லாஹ் பர்ஹான் தாழங்குடா: தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆட்கொல்லி டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக ஆரையம்பதி பிரதேசத்தில் டெங்கு நோய் பரவும்

←Previous Page
1 … 917 918 919 920 921 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar