கனடாவைச் சேர்ந்த 82 வயது பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல்

nobel– SHM

ஸ்டாக்ஹோம்: கனடாவைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோவுக்கு 2013ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளைத் தொடர்ந்து இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு கனடாவைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோவுக்கு (82) கிடைத்துள்ளது.

சிறுகதைகள் எழுதுவதில் வல்லவரான ஆலிஸ் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 13வது பெண் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 110வது எழுத்தாளர் ஆலிஸ் தான்.

கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை சீனாவைச் சேர்ந்த நாவலாசிரியர் மோ யான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment