சென்னை: ராஜா ராணியால் தனது அழகில் பல இளசுகளைக் கட்டுப்போட்டு வைத்திருந்த கேரளத்து பெண்குட்டி – இளம் நடிகை நஸ்ரியா, இயக்குநர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிர்வேல் மீது கொடுத்த புகாரை இன்று வாபஸ் பெற்றார் தனது தொப்புளைக் காட்டும் காட்சிக்கு அனுமதியில்லாமல் ‘டூப்’ போட்டு எடுத்தார் என சற்குணம் மீதும், கதிர்வேல் மீதும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறியிருந்தார் நஸ்ரியா.
ஆனால் படத்தின் ட்ரைலரிலிருந்து சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சற்குணத்திடம் மன்னிப்பு கேட்டு சமரசம் ஆகிவிட்டார் நஸ்ரியா. இதனை செய்தியாளர்களிடமும் தெரிவித்த நஸ்ரியா, இன்று கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
இதற்கிடையில், சினிமாவுக்குள் நுழைந்த பின்னர் தனது சுய விளம்பரத்திற்காகவே இவ்வாறு ஓர் புரளியை ஏற்படுத்திவிட்டதாக நஸ்ரியா மீது தென்னிந்திய சினிமா வட்டாரங்களும் மறைமுகமாக அதிருப்திகளை தெரிவித்து வருகின்றனர்.
இஸ்லாமிய ஓர் பெண்ணுக்கு சினிமாவும், கவர்ச்சியும், கூடலும், பாடலும் தேவைதானா எனவும் பல விமர்சனங்கள் நஸ்ரியாவை நோக்கி தொடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் இயக்குனருடன் செய்துகொள்ளப்பட்ட சமரசங்களையடுத்து, இயக்குனருடன் இன்னும் அதிகமாக ‘ஒத்துழைக்க’வேண்டிய தேவைகள் ஏற்படும் எனவும் சினிமா வட்டாரங்கள் தற்பொழுது தெரிவிக்கின்றன.
‘இந்த புகாருக்கு இனி வேலையில்லை. படம் பார்க்காமல் நான் புகார் கொடுத்துவிட்டேன். எனவே அதை இப்போது வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்’ என்றார். மீண்டும் படத்தில் நடிக்க சற்குணம் அழைத்தால் நடிப்பீர்களா என்று அவரிடம் கேட்டனர். ‘நிச்சயமாக நடிப்பேன்…எனக்கு அவருடன் எந்தப் பிரச்சினையும் இல்லை’ என்றார்.
தொப்புள் பிரச்சினை முடிந்து விட்டது. இப்போது அவர்கள் இருவரும் சேர்ந்துவிட்டனர். ஆனால் இஸ்லாம் மார்க்கத்தை இயக்குனர் சற்குணம் ‘நய்யாண்டி’யாக பேசியதாக தெரிவித்து புகார் கொடுத்த நடிகை நஸ்ரியா, இதற்கு தற்பொழுது என்ன கூறப்போகிறார் என்று உலகம் எதிர்பார்த்திருக்கின்றனது.
ஓர் முஸ்லிம் பெண் நடிப்பதா என்று முஸ்லிம் இளைஞர்கள் ஆவேசப்பட்டாலும், திரையரங்குகளில் இத்தகைய முஸ்லிம் இளைஞர்களே போட்டி போட்டு இவ்வாரான சினிமாக்களை பார்த்து ரசித்து ஊக்குவித்து வருவதாகவும் நடிகர் உலகம் தெரிவித்திருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!

![7cc51d09-df97-4528-b79a-ed8e55856acb_original_image_500_500[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/7cc51d09-df97-4528-b79a-ed8e55856acb_original_image_500_5001.jpg?w=500&h=333)


Leave a comment