WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு புல்மோட்டை காணி பிரச்சினை தொடர்பாக அனைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியத்தினால் அவசர மகஜர் அனுப்பி வைப்பு

    – எம்.ரீ. ஹைதர் அலி புல்மோட்டை: புல்மோட்டை முஸ்லிம்களின் காணிகளில் இடம்பெற்றுவரும் பௌத்த மதகுருவின் அத்துமீறல் மற்றும் பிரதேச மக்களின் நீண்ட கால காணி பிரச்சினை தொடர்பாக தீர்வுகளை பெற்றுத்தரும்படியான மகஜர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இம்மகஜர் புல்மோட்டை அனைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியத்தினால் பதிவுத் தபால் மற்றும் தொலை நகல் ஊடாகவும் 14.09.2018ஆம் திகதி – வெள்ளிக்கிழமை (இன்று) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  • அமெரிக்காவைத் தாக்கும் ஃபுளோரன்ஸ் சூறாவளி

    நியுயோர்க்: அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி தாக்கத் தொடங்கியுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களின் உட்புறங்களை நோக்கி இந்த சூறாவளி இப்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஃபுளோரன்ஸ் சூறாவளி அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்லலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வியாழன் இரவு முதல், வீடுகளில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

  • ஐபோன் எக்ஸ்.எஸ் & எக்ஸ்.எஸ் மேக்ஸ் & எக்ஸ்.ஆர் பற்றிய விபரங்கள்

    நியுயோர்க்: Apple iphone நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளின் தகவல்களை அதிகாரப்பூர்வமாக நேற்று முன்தினம் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் (APPLE IPHONE XS), Apple ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ்(APPLE IPHONE XS MAX) மற்றும் Apple ஐபோன் எக்ஸ்.ஆர்(APPLE IPHONE XR) என்று அழைக்கப்படும் மூன்று புதிய மாடல் ஐபோன்களை நேற்று அறிமுகம் செய்துள்ளது Apple நிறுவனம். பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் புதிய தொழிநுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும்…

  • கடைசி பந்து சிக்சர்.. தனியாளாக ஆடிய மியான்டாட்

    லாஹூர்: : ஆசிய கோப்பை தொடர் ஒருபுறம் நடந்து வர அதை சிறிது மாற்றி மற்றொரு தொடர் 1986இல் தொடங்கப்பட்டது. அதுதான், ஆஸ்ட்ரல் – ஆசிய கோப்பை.ஆசியா கோப்பை கிரிக்கெட் நாடுகள் என்றால் அப்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மட்டுமே. அதனால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசீலாந்து நாடுகளை சேர்ந்து இந்த ஆஸ்ட்ரல் – ஆசிய கோப்பை தொடங்கியது.

  • 2011 உலகக்கோப்பை இறுதியில் யுவராஜுக்கு முன் தோனி இறங்கியது ஏன்?

    டெல்லி: 2011 உலகக்கோப்பை- சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியா தன் இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது. அந்த தொடரில் பல மலரும் நினைவுகளை இப்போது நினைத்தாலும் யுவராஜ் சிங், அந்த தொடர் முழுவதும் உச்சகட்ட பார்மில் இருந்தார்.இறுதிப் போட்டியில் இலங்கை அடித்த 274 ரன்களை துரத்திய இந்திய அணியில் அன்று யுவராஜுக்கு முன்பு தோனி களமிறங்கினார். அது ஏன் என பல கதைகள் இருந்தாலும், சேவாக் சொல்லும் ஒரு விஷயம் ஆச்சரியப்படும் வகையில் உள்ளது.

  • Contacts – ஐபோனில் அழிப்பது எப்படி?

    ஐபோனின் Contacts app கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்திக்கவில்லை எனலாம். ஆப் இன்டர்ஃபேஸ் பயன்படுத்தக்கூடிய வகையில் எளிமையாக இருந்தாலும், அதிக கன்டாக்ட்களை ஒரே சமயத்தில் அழிப்பது சில சமயங்களில் கடினமாகி விடும். ஆனால் ஐகிளவுட் மற்றும் ஐடியூன்ஸ் கொண்டு ஒரே சமயத்தில் அதிக கன்டாக்ட்களை அழிக்க முடியும். 

  • ‘முஸ்லிம்கள்ஆயுதம் ஏந்தி போரிடுபவர்களல்லர்’: சரத் பொன்சேகா

    கொழும்பு: “இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரும் பதுங்கு குழிகளில் இருந்து போரிட்டு மாண்டதாகவே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தது” என்று  அமைச்சர்  சரத் பொன்சேகா தெரிவித்தார். இறுதிப் போரில் 4000 முதல் 5000 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டிருக்கலாம் என தான் கணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  • கல்முனை மஹ்மூத் கல்லூரியின் புதிய அதிபராக ஐ.எல்.ஏ. ரஹ்மான் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்

    எம்.எஸ்.எம்.ஸாகிர் கல்முனையில் உள்ள பெண்கள் கல்விகற்கும் பிரபல பாடசாலையான மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராக சாய்ந்தமருதைச் சேர்ந்த ஐ.எல்.ஏ. ரஹ்மான் நியமிக்கப்பட்டு,  உத்தியோகபூர்வமாக கடந்த திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றார்.

  • மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நாளை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரங்கள்- துண்டுப்பிரசுரம் இணைப்பு

    (பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நாளை 07ம் திகதி வெள்ளிக்கிழமை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  • அ இ ம கா வில் பதவி வழங்கல்

    வை எல் எஸ் ஹமீட் அ இ ம காங்கிரசின் பெயரில் அவ்வப்போது சில பதவிநிலைகளுக்கு சிலரை நியமிக்கின்ற செய்திகள் சமூகவலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றது. இது தொடர்பாக சில தெளிவுகளை வழங்க வேண்டியது எனது கடமையாகும். 2016ம் ஆண்டு ஒரு கட்சியின் பேராளர் மாநாட்டிற்கு எத்தனைபேரை அழைக்க வேண்டும்; யரை அழைக்க வேண்டும், யார் அவர்களை அழைக்க வேண்டும்; என்ற எந்த விதிமுறைகளும் தெரியாமல் ஒரு திருமணத்திற்கு அழைப்பிதழ் அனுப்புவதுபோன்றி அனுப்பி ஏதோ ஒரு கூட்டத்தை வைத்துவிட்டு அதற்கு…

  • குப்பையை கோடியாக்கிய எம்பிஏ பட்டதாரி

    டெல்லி: பெயர் அக்ஷய் ஜெயின், வயது 29. பரீதாபாத்தில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்களில், அவன் மட்டும்தான் மின்னணு கழிவுகளால் ஆன குப்பைகளை மூலதனக் கண்களோடு பார்த்தான். சுற்றுச்சூழலுக்கு மாசு உண்டாக்கும் அதனை சுத்திகரிக்க முடிவு செய்தான். பலருக்கு மூளை மூலையிலேயே இருந்தபோது, அவன் மட்டும்தான் மூளையை முதலீடாக மாற்றினார். இன்று மாதத்துக்கு பலகோடி ரூபாய் சம்பாதிக்கும் தொழிலதிபராக வளர்ந்து கொண்டிருக்கிறான்.

  • இந்தியாவும் தங்கமும்

    டெல்லி: தங்க நகை நுகர்வில் உலக அளவில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய பெண்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். எதிர்கால முதலீடாக பெண்கள் நினைப்பது தங்க நகைகளைத்தான். உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்துவருகிறது. இந்தியர்கள் தங்கத்தை புனிதமான பொருளாக மதிப்பதுடன், நல்ல முதலீடாகவும் மக்கள் கருதுவதால்தான் இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதுமே தேவை அதிகமாக உள்ளது.

←Previous Page
1 … 88 89 90 91 92 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar