குப்பையை கோடியாக்கிய எம்பிஏ பட்டதாரி

akshayடெல்லி: பெயர் அக்ஷய் ஜெயின், வயது 29. பரீதாபாத்தில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்களில், அவன் மட்டும்தான் மின்னணு கழிவுகளால் ஆன குப்பைகளை மூலதனக் கண்களோடு பார்த்தான். சுற்றுச்சூழலுக்கு மாசு உண்டாக்கும் அதனை சுத்திகரிக்க முடிவு செய்தான். பலருக்கு மூளை மூலையிலேயே இருந்தபோது, அவன் மட்டும்தான் மூளையை முதலீடாக மாற்றினார். இன்று மாதத்துக்கு பலகோடி ரூபாய் சம்பாதிக்கும் தொழிலதிபராக வளர்ந்து கொண்டிருக்கிறான்.

2015 ஆம் ஆண்டில் நமோ ஈவேஸ்ட் மேனேஜ்மெண்ட் என்ற ஆலையைத் தொடங்கி, மின்கழிவுகளை சுத்திகரிக்கத் தொடங்குகிறான். அடுத்த 3 மாதத்தில் 5.5 கோடி ரூபாய் சம்பாதிக்கிறான். அடுத்த 3 ஆண்டுகளில் 25 கோடி ரூபாய் என இலக்கு நிர்ணயிக்கிறான். அதற்கு ஏதுவாக 2017-18 ஆம் நிதி ஆண்டுகளில் 8 கோடி ரூபாயை சம்பாதித்து விட்டான்.

பழைய மின்னணு பொருட்கள் எக்சேஞ்சாகவோ, வேர்க்கடலைகாரனிடமோ மாற்றுவது வழக்கம். இல்லையென்றால் தூக்கி எறிவது பழக்கமாக இருக்கிறது. இப்படி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான முறையில் தூக்கி எறியப்படும் கழிவுகளை சுத்திகரிப்பதை கடமையாக ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார் அக்ஷய்.

akshay
yourkattankudy/india

மின்பொருட்களில் செயல்படாதவை அகற்றப்படுகிறது. லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை பழுதுபார்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒயர்கள் மற்றும் மெட்டல் போன்றவை சுத்திகரிக்கப்படுகிறது. இதில் தேவையயில்லாத கழிவுகள் அரசு அங்கீகரித்த குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு 15 டன் மின்கழிவுகள் வீதம் ஆண்டுக்கு 5500 டன் கழிவுகள் சுத்திகரிக்கலாம் என்று அக்ஷய் தெளிவுபடுத்தினார்.

டெல்லியில் பாரதீய வித்யா பவனில் பள்ளிப்படிப்பையும், கோஸ்டல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மேனேஜ்மெண்டில் பி டெக் பட்டயப் படிப்பை நிறைவு செய்தார் அக்சய். லண்டன் கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டத்தை முடித்து 2012 ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார்.

நான் சாதாரணமான மாணவன் தான். படிப்பாளியும் இல்லை முட்டாளும் இல்லை. பேட்மிண்டன், டேபிள் டென்னிஸில் ஆர்வம் இருந்தது. சும்மா இருக்கும்போது புத்தகம் படிப்பேன். மற்ற நேரங்களில் மனிதர்களின் அனுபவங்களில் இருந்து வாழ்க்கையை கற்றுக் கொண்டேன். மதிப்பெண்ணை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஏனென்றால் வெற்றிகரமான மனிதர்களுக்கு பின்னால் ஆர்வம்தான் இருந்திருக்கிறது என்றார் அக் ஷய்.

அக்ஷயின் வணிக உத்தி அவரது மரபணுவில் இருந்து வந்தது. அவருடைய தாத்தா 1975 இல் தொடங்கிய கம்பெனி தற்போது 600 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. இதில்தான் அவரது அப்பா நரேஷ் ஜெயினும் பணியாற்றுகிறார்.

லண்டனில் படிப்பை முடித்து பரீதாபாத் திரும்பியதும் மாருதியில் 38000 ரூபாய் சம்பளத்தில் பணியில் இணைகிறார். லண்டனில் மின்கழிவு மறு சுழற்சி முறையில் பின்பற்றிய நேர்த்தியை பார்த்த அக்ஷய், அப்பாவிடம் 1 கோடி ரூபாய் கடனை வாங்குகிறார். பரீதாபாத்தில் மறுசுழற்சி தொழிற்சாலையைத் தொடங்குகிறார்.

மின்கழிவுகளை வீடுகளில் மட்டும் சேகரிக்காமல் பல்வேறு இடங்களில் அதற்கான தொட்டிகளை வைத்து சேகரித்து வருகிறார்கள். இப்போது 23 மாநிலங்கள் மற்றும் 7 முகமைகள் மூலமாக மின்கழிவுகளை பெறப்பட்டு தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. சாம்சங், கோத்ரெஜ், ஏசர் வோல்டாஸ் மற்றும் புளூ ஸ்டார் ஆகிய நிறுவனங்களிலும் சேதமடைந்த மின்பொருட்களை மொத்தமாக வாங்கி வருவதாக அக்சய் கூறுகிறார்.

தொடங்கிய ஆறு மாதத்தில் 30 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டிய நமோ ஈவேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் 2017-18 நிதி ஆண்டுகளில் 8 கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 25 கோடி ரூபாய் என்பது அக்சயின் இலக்கு.

One thought on “குப்பையை கோடியாக்கிய எம்பிஏ பட்டதாரி”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s