அ இ ம கா வில் பதவி வழங்கல்

  • வை எல் எஸ் ஹமீட்

acmc makkal congஅ இ ம காங்கிரசின் பெயரில் அவ்வப்போது சில பதவிநிலைகளுக்கு சிலரை நியமிக்கின்ற செய்திகள் சமூகவலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றது. இது தொடர்பாக சில தெளிவுகளை வழங்க வேண்டியது எனது கடமையாகும். 2016ம் ஆண்டு ஒரு கட்சியின் பேராளர் மாநாட்டிற்கு எத்தனைபேரை அழைக்க வேண்டும்; யரை அழைக்க வேண்டும், யார் அவர்களை அழைக்க வேண்டும்; என்ற எந்த விதிமுறைகளும் தெரியாமல் ஒரு திருமணத்திற்கு அழைப்பிதழ் அனுப்புவதுபோன்றி அனுப்பி ஏதோ ஒரு கூட்டத்தை வைத்துவிட்டு அதற்கு பேராளர் மாநாடு என்று பெயரை வைத்து புதிய யாப்பு, புதிய உத்திகத்தர்கள் நியமித்ததற்கெதிராக நான் நீதிமன்றம் சென்றிருப்பது அனைவரும் அறிந்ததே!

இவர்கள் சமர்ப்பித்த புதிய யாப்போ, புதிய உத்தியோகத்தர்களையோ தேர்தல் ஆணையாளர்/ ஆணைக்குழு அங்கீகரிக்கவில்லை.

ஒரு தேர்தல் வருகின்றபோது ஒரு கட்சியில் இரு தரப்பிற்கிடையில் பிரச்சினை இருந்தால் அதில் ஒரு தரப்பை தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணைக்குழு அனுமதிப்பதற்கு தேர்தல் சட்டத்தில் இடமுண்டு. அதன் அடிப்படையில் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் நியமனப்பத்திரம் தாக்கல்செய்ய குறித்த ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேநேரம் அக்கடிதத்தில் வேறு எதற்கும் அவர் உரிமை கோரக்கூடாது; என்றும் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்பொழு தேர்தல் முடிந்துவிட்டது. அந்த நபருக்கு கட்சியில் தற்போது எந்த உரிமையுமில்லை. இருந்தாலும் அந்த நபர் அரசியல் நாகரீகத்திற்கப்பால் தொடர்ந்தும் தன்னை கட்சியின் ‘ செயலாளர் நாயகமாக’ விழித்து ஊடகங்களுக்கு அறிக்கை விட்டு வந்தார். அதைப் பார்த்தும் நான் பொறுமையாக இருந்தேன்.

இப்பொழுது அதன் தலைவர் என்பவர் சிலரை கட்சியின் சில பதவிநிலைகளுக்கு நியமிக்கின்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன.

இங்கு புரிந்துகொள்ள வேண்டியவை
————————————————-
தேர்தல் ஆணையாளரால் இதுவரை அங்கீகரிக்கப்பட்டிருப்பது என்னால் சமர்ப்பிக்கப்பட்ட யாப்பும் உத்தியோகத்தர் பட்டியலுமாகும்.

புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட யாப்போ, உத்தியோகத்தர் பட்டியலோ தேர்தல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை. அங்கீகரித்திருந்தால் ஆதாரத்தைக் காட்டலாம்.

அவர் இன்னும் தலைவராக இருப்பது நான் வழங்கிய பட்டியலின் அடிப்படையிலாகும்.

தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட நான் வழங்கிய யாப்பின் பிரகாரம் பதவிநிலைகளுக்கு யாரையும் நியமிக்கின்ற அதிகாரம் தலைவருக்கு இல்லை.

புதிய யாப்பும் அங்கீகரிக்கப்படவில்லை.
அங்கீகரிக்கப்பட்ட யாப்பும் அதிகாரம் வழங்கவில்லை. எனவே எந்த அடிப்படையில் இந்தப்பவிகள் வழங்கப்படுகின்றன?

பதவி வழங்குபவருக்கு யாப்புத்தெரியாதென்பது நாடறிந்த விடயம். பதவி பெறுபவர்களாவது யாப்பை வாசிக்கக்கூடாதா? பதவி வழங்குவதாக எழுதப்படுகின்ற அந்தக் காகிதத்தின் பெறுமதிகூட அந்தப்பதவிகளுக்கு இல்லை; என்பதைப் புரியமுடியாதவர்களா? இவர்கள்.

இந்தக்கட்சியின் தேர்தல்ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட செயலாளர் நாயகமாக இன்னும் வை எல் எஸ் ஹமீடே இருக்கின்றார். அவர் செயலாளர் நாயகம் இல்லை; என்றோ புதிய ஒருவரை செயலாளர் நாயகமாக ஏற்றுக்கொண்டோ எந்தக் கடிதமும் தேர்தல் ஆணைக்குழுவால் அனுப்பப்படவில்லை. நீதிமன்றம் தீர்மானிக்கும்வரை தேர்தல் ஆணைக்குழுவால் அதனைச் செய்யமுடியாது.

தேர்தல் ஆணையாளர் செய்திருப்பதெல்லாம், இக்கட்சியின் செயலாளர் பதவி தொடர்பாக வழக்கு இருக்கிறது.’ என்று மட்டும்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே, வை எல் எஸ் ஹமீட் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டார். அவ்வங்கீகாரம் தேர்தல் ஆணைக்குழுவினாலோ, நீதிமன்றத்தாலோ ரத்துச்செய்யப்படவில்லை. பதவிநிலைகளுக் ஆட்களை நியமிக்கும் அதிகாரம் இருந்தும் வழக்கு இருப்பதால் மௌனமாக இருக்கின்றேன்.

இவ்வாறு தொடர்ந்தும் நியமனங்களைச் செய்தாலோ, அல்லது இவ்வாறு என்னால் வழங்கப்படாத கட்சியின் பதவிகளை யாராவது விளம்பரம் செய்தாலோ அப்பதவிகளுக்கு நானும் புதியவர்களை நியமித்து அதனை விளம்பரம் செய்யவேண்டிய நிலைவரும்; என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது அதிகாரத்தை இன்னொருவர் எனது அனுமதியின்றி பாவிக்க என்னால் அனுமதிக்க முடியாது; என்பதைப்புரிந்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s