icloudஐபோனின் Contacts app கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்திக்கவில்லை எனலாம். ஆப் இன்டர்ஃபேஸ் பயன்படுத்தக்கூடிய வகையில் எளிமையாக இருந்தாலும், அதிக கன்டாக்ட்களை ஒரே சமயத்தில் அழிப்பது சில சமயங்களில் கடினமாகி விடும். ஆனால் ஐகிளவுட் மற்றும் ஐடியூன்ஸ் கொண்டு ஒரே சமயத்தில் அதிக கன்டாக்ட்களை அழிக்க முடியும். 

அப்டேட் செய்யப்பட்ட ஐடியூன்ஸ் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

உங்களின் ஐகிளவுட் Contact sync On செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சீராக வேலை செய்ய இணைய இணைப்பு.

வழிமுறை 1: ஐகிளவுட் வலைத்தளம் பயன்படுத்துவது:

icloud

1. முதலில் ‘www.icloud.com’ வலைத்தளத்திற்கு பிரவுசர் மூலம் உங்களது கம்ப்யூட்டர் அல்லது மேக் மூலம் செல்ல வேண்டும்.

2. உங்களது ஐடி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் Log In செய்ய வேண்டும்.

3. இனி, கன்டாக்ட்ஸ் ஐகனை க்ளிக் செய்யவும்.

4. நீங்கள் அழிக்க வேண்டிய கன்டாக்ட்களை தேர்வு செய்து கீபோர்டில் உள்ள Delete பட்டனை க்ளிக் செய்யவும்

5. Delete பட்டனை க்ளிக் செய்ததும் உறுதி செய்யக்கோரும் Option வரும், அதனை உறுதி செய்தால் வேலை முடிந்தது.