ஐபோன் எக்ஸ்.எஸ் & எக்ஸ்.எஸ் மேக்ஸ் & எக்ஸ்.ஆர் பற்றிய விபரங்கள்

iphoneநியுயோர்க்: Apple iphone நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளின் தகவல்களை அதிகாரப்பூர்வமாக நேற்று முன்தினம் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் (APPLE IPHONE XS), Apple ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ்(APPLE IPHONE XS MAX) மற்றும் Apple ஐபோன் எக்ஸ்.ஆர்(APPLE IPHONE XR) என்று அழைக்கப்படும் மூன்று புதிய மாடல் ஐபோன்களை நேற்று அறிமுகம் செய்துள்ளது Apple நிறுவனம். பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் புதிய தொழிநுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஆப்பிள் சாதனங்கள் சில பிரத்தியேக அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் மாடல் ஐபோன்கள், 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் 458PPI சூப்பர் ரெட்டினா எச்டிஆர் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இந்த பிரத்தியேக டிஸ்ப்ளே திரைகள் டால்பி விஷன், எச்.டி.ஆர். 19 மற்றும் 120Hz டச்-சென்சிங் சப்போர்ட் சேவை கொண்ட சிறந்த காட்சி அனுபவத்தைப் பயனர்களுக்கு வழங்குகிறது. புதிய ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் மாடல்களிள் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இதுவரை ஐபோன் இல் இல்லாத ஒரு புதிய மாற்றத்தை ஐபோன் பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது.

புதிய ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் ஐபோன்களில் முதல் முறையாக டூயல் சிம் சப்போர்ட் வசதி டூயல் ஸ்டான்ட்-பை சேவை அனைத்தும் இ-சிம் மூலம் வழங்கப்படுகிறது. எனினும் சீனாவில் மட்டும் பிரத்தியேக டூயல் சிம் ஸ்லாட் வசதி கொண்ட பிரத்தியேக ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் விழாவில் தெரிவித்தது.

புதிய ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் போன்களில் ஏ12 பயோனிக் 7என்.எம் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உலகின் முதல் 7 nm சிப் மற்றும் 6.9 பில்லியின் டிரான்சிஸ்டர்களில் இயக்கத்துடன் களமிறங்கி இருக்கிறது இந்த புதிய சிப்செட். முன்பு பயன்படுத்தப்பட்ட ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6-கோர் சி.பி.யு. கொண்ட புதிய சிப்செட் 40% குறைந்த மின்சக்தியைப் பயன்படுத்தி அதிக செயல்திறன் கொண்ட உலகின் முதல் சிப்செட். இதனால் ஐபோனின் பேட்டரி பேக்கப் முந்தைய மாடல்களை விட அதிக நேரம் கிடைக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இத்துடன் கூடுதலாக புதிய ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் போன்களில் வழங்கப்பட்ட ஃபேஸ் ஐடி சேவை முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும் அதிக பாதுகாப்புடனும் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

iphone
yourkattankudy/technology

இந்த இரண்டு புதிய மாடல்களும் திரை அளவு மட்டும் வேறுபடுகிறது மற்ற அனைத்து அம்சங்களும் ஒன்றானவை தான்.

– ஐபோன் எக்ஸ்.எஸ் : 5.8இன்ச் 2436×1125 பிக்சல் ஓஎல்இடி 458ppi சூப்பர் ரெட்டினா எச்டிஆர் டிஸ்ப்ளே உடன் கூடிய 3D டச் திரை
– ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ்: 6.5இன்ச் 2688×1245 பிக்சல் ஓஎல்இடி 458ppi சூப்பர் ரெட்டினா எச்டிஆர் டிஸ்ப்ளே, 3D டச் திரை
– 6கோர், ஏ12 பயோனிக் 64பிட் 7என்எம் பிராசஸர் 4கோர் ஜிபியு, எம்12 மோஷன் கோ பிராசஸர்
– 64 ஜிபி / 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்
– iOS 12
– IP68 தர சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்
– டூயல் சிம்
– 12 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் பிரைமரி கேமரா
– டூயல் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் உடன் கூடிய 12 மெகா பிக்சல் டெலி போட்டோ கேமரா
– ரெட்டினா ஃபிளாஷ் 7 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ,
– வைப்பை
– ப்ளூடூத்
– ஜி.பி.எஸ்
– க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
– ஃபாஸ்ட் சார்ஜிங்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் எக்ஸ்.எஸ் மேக்ஸ் ஸ்மார்ட்போன் கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஐபோன் எக்ஸ் எஸ் விலை $999 என அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய மதிப்பின்படி ரூ.71,813 முதல் துவங்குகிறது. ஐபோன் எக்ஸ் மேக்ஸ் இன் விலை $1,099 எனவும் இது இந்திய மதிப்பின்படி ரூ.79,001 முதல் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் சீரிஸ் முதற்கட்டமாக 30 நாடுகளில் விற்பைக்கு கிடைக்கும் என்றும் இதற்கான முன்பதிவு செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் துவங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் ரூ.99,990 மற்றும் ரூ.1,09,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் இன் அடுத்த புதிய மாடலான ஐபோன்எக்ஸ்.ஆர்

– 6.1இன்ச் 1792×828 பிக்சல் எல்.சி.டி 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே உடன் கூடிய 3D டச்
– 6கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர் மற்றும் 4கோர் ஜிபியு கொண்ட M12 மோஷன் கோ-பிராசஸர்
– 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
– iOS 12
– IP68 தர சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்
– டூயல் சிம்
– 12 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் பிரைமரி கேமரா உடன் கூடிய இமேஜ் ஸ்டேபிலைசேஷன் மற்றும் ட்ரூ டோன் ஃபிளாஷ்
– 7 எம்பி செல்ஃபி கேமரா
– ட்ரூ டெப்த் கேமரா
– 4ஜி வோல்ட்
– வைபை
– ப்ளூடூத்
– ஜி.பி.எஸ்
– க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
– ஃபாஸ்ட் சார்ஜிங்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் மாடல் வைட், பிளாக், ப்ளூ, மஞ்சள், கோரல் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் துவக்க விலை $749 என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.ஆர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அக்டோபர் 26-ம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s