-
SLACS பரீட்சையில் சிறுபான்மை மக்களுக்கு நடந்த மிகப் பெரும் துரோகம் : யார் இதனை தட்டிக் கேட்பது.?
– முஹம்மட் அமீன் இலங்கையில் முன்நிலைப்படுத்தப்பட்ட 15 வகையான சேவைகளில் இலங்கை கணக்காளர் சேவையும் (SLACS) ஒன்று. இது இறுதியாக 2016 நவம்பர் 04 ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரிட்சைக்கான அழைப்பு விடுக்கப்பட்டு 2017 ஏப்ரல் மதம் பரீட்சை இடம்பெற்றது. பரீட்சை முடிவடைந்து சாதாரணமாக 05 அல்லது 06 மாதங்களில் வெளியாகின்ற பெறுபேறு சுமார் 07 மாதங்கள் கழிந்தும் வெளியாகாத நிலையில் பரீட்சை திணைக்களத்தால் எந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் வராத நிலையில்…
-
“என்னைக் கொல்ல முயற்சிப்பவர்களுக்கு எனது வீட்டுக் கதவு என்றும் திறந்தே இருக்கிறது” – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
கொழும்பு: ரணில் விக்ரமசிங்கவுக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தாலும், பிரதமராக ஏற்கப் போவதில்லை என்ற அரசியல் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும், ஜனநாயக ரீதியாக நாடாளுமன்ற சம்பிரதாயத்தை ஏற்று ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தியா முஸ்லீ்ம் நாடாகி விடாமல் மோடி தடுக்க வேண்டும்: நீதிபதி சென்
டெல்லி: இந்தியா ஒரு இந்து நாடு. இது முஸ்லீம்களின் நாடாக மாறி விடக் கூடாது. அதை தடுக்க மோடிஜியால்தான் முடியம் என்று மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபத சுதீப் ரஞ்சன் சென் கூறியிருப்பது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணையின்போது இப்படிப் பேசியிருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம்கள் அல்லாத பழங்குடியின மக்கள் இந்தியாவில் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் வசிக்க அனுமதிக்க வேண்டும்.
-
“அரசில் இருந்து விலக தாங்கள் தயார்”
அரசில் இருந்து விலக தாங்கள் தயாராக இருப்பதாக மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றம் சற்று முன்னர் வழங்கிய தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
-
இரு பிறப்புறுப்புக்களுடன் வாழ்ந்து வரும் 22 வயதுப் பெண்
நிவ்யோர்க்: யூடியூப் பிரபலம் கேஸான்டிரா பங்க்சன் எனும் 22 வயது இளம் பெண் இரண்டு பிறப்புறுப்புகளுடன் வாழ்ந்து வருகிறார். கேஸான்டிரா பங்க்சனின் நடை, சிறு வயது முதலே வாத்து போல தான் இருந்திருக்கிறது. முதலில் அனைவரும் இதை கேலி, கிண்டல் செய்திருக்கின்றனர், குடும்பத்தினர் உட்பட. பத்து வயதிலியே பருவம் அடைந்துவிட்டார் கேஸான்டிரா பங்க்சன். அது ஓர் கிறிஸ்மஸ் நாள் என்று கூறியிருக்கிறார்.
-
உலக முஸ்லிம் லீக்கின் செயற்பாடுகளை இலங்கையில் விரிவுபடுத்துவது சம்பந்தமாக விசேட கலந்துரையாடல்
கொழும்பு: உலக முஸ்லிம் லீக்கின் (ராபிததுல் ஆலம் அல் இஸ்லாமி) செயற்பாடுகள், அபிவிருத்திப் பணிகளை இலங்கையில் விரிவுபடுத்துவது சம்பந்தமாக சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் உலக முஸ்லிம் லீக் ஆகியவற்றின் சிரேஷ்ட ஆலோசகர் அஹமட் ஹமாட் அலி ஜிலானுக்கும் உலக முஸ்லிம் லீக்கின் தெற்காசிய வலயத்துக்கு பொறுப்பான உயர்பீட உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
-
மாவனல்லை ஸாஹிரா கத்தார் கிளைக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம்!
டோஹா: மாவனல்லை ஸாஹிரா கல்லாரியின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை இலங்கை தூதரகத்தின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை திஸம்பர் மாதம் 02ஆம் திகதி கட்டார் நாட்டிற்கான இலங்கை தூதுவர் மாண்புமிகு திரு. பி.டி.பி.எஸ்.ஏ. லியனகே அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டது. கட்டார் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. முகம்மத் லாfபிர், பொதுச் செயலாளர் திரு. அகமத் முனாப், உதவி பொருளாலர் திரு. மிfப்ரா ஹனிபா, நிர்வாக குழு உறுப்பினரான அப்துல் மலிக் ஆகியோர் இந்நிகழ்வில்…
-
7 நாட்களுக்குள் தீர்வு : ஜனாதிபதி
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு எதிர்வரும் 7 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மேளனம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (4) இடம்பெற்றது. இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து இருவர் ஐ.தே.க.வுக்கு தாவல்
கொழும்பு : ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டனர். மேல் மாகாண சபை உறுப்பினர்களான நௌசர் பௌசி மற்றும் கீர்த்தி காரியவசம் ஆகியோரே இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளனர்.
-
“மகிந்தவும் இல்லை, அமைச்சரவையும் இல்லை”
கொழும்பு: மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவை பதவி வகிப்பதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த நீதிப் பிரேரணை மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடையுத்தரவை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாடு
கொழும்பு: இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் பெலவத்தை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
-
தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட ஜேவிபி விருப்பம்
ஜேவிபியும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஒடுக்குமுறை அரசாங்கங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினரை தெற்கிலும் வடக்கிலும் பிரதிநிதித்துவம் செய்கின்றன என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக இணைந்து போராடவேண்டிய கடமை எங்களுக்குள்ளது என குறிப்பிட்டுள்ளார்.