உலக முஸ்லிம் லீக்கின் செயற்பாடுகளை இலங்கையில் விரிவுபடுத்துவது சம்பந்தமாக விசேட கலந்துரையாடல்

6e5a1b3b-e493-4030-abf6-cc9c6d88e906கொழும்பு: உலக முஸ்லிம் லீக்கின் (ராபிததுல் ஆலம் அல் இஸ்லாமி) செயற்பாடுகள், அபிவிருத்திப் பணிகளை இலங்கையில் விரிவுபடுத்துவது சம்பந்தமாக சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் உலக முஸ்லிம் லீக் ஆகியவற்றின் சிரேஷ்ட ஆலோசகர் அஹமட் ஹமாட் அலி ஜிலானுக்கும் உலக முஸ்லிம் லீக்கின் தெற்காசிய வலயத்துக்கு பொறுப்பான உயர்பீட உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் இல்லத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, உலக முஸ்லிம் லீக்கின் செயற்பாடுகள் அதன் பணிகளை இலங்கையில் முன்னெடுப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டதுடன், அதனை இலங்கை முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

6e5a1b3b-e493-4030-abf6-cc9c6d88e906

அத்துடன், சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இலங்கை முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சுக்கும் இடையில் உடன்படிக்கைகள் மேற்கொள்வது சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, உலக முஸ்லிம் லீக்கின் மூலம் இலங்கையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அதன் கிளையொன்றினை இலங்கையில் திறந்து அதனை பலப்படுத்துவது சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் அஷ்ஷேய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா, அல்-ஹாஜ் ஜிப்ரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

– R.Hassan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s