“என்னைக் கொல்ல முயற்சிப்பவர்களுக்கு எனது வீட்டுக் கதவு என்றும் திறந்தே இருக்கிறது” – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

maithripala-sirisena[1]கொழும்பு: ரணில் விக்ரமசிங்கவுக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தாலும், பிரதமராக ஏற்கப் போவதில்லை என்ற அரசியல் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும், ஜனநாயக ரீதியாக நாடாளுமன்ற சம்பிரதாயத்தை ஏற்று ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலப்பிரச்சினைகளுடன் பார்க்கும்போது, எதிர்காலத்தில் இணைந்து பயணிப்பதற்கு எவ்வித உறுதியும் இல்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“கடாபியைப் போல் இழுத்துச் சென்று என்னைக் கொல்ல வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சிக் காரர்களும், என்.ஜி.ஓ. காரர்களும் எச்சரித்தனர். என்னைக் கொல்ல முயற்சிப்பவர்களுக்கு எனது வீட்டுக் கதவு என்றும் திறந்தே இருக்கிறது” என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

maithripala-sirisena[1]

yourkattankudy/politics

ரணில் விக்ரமசங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை (16) சந்தித்தபோது ஜனாதிபதி இதனைக் கூறினார். ”கடந்த நான்கு ஆண்டுகளில் பிக்குகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. முப்படை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர். இவற்றை செய்ய வேண்டாம் எனக் கூறினேன். இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சர்வதேசம் கூறுகிறது. ஆனால் எமது இராணுவத்தினரைக் கொன்ற பிரபாகரனின் தரப்பினருக்கு தண்டனை இல்லை. விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். சர்வதேசம் எனக் கூறும் தரப்பினர் எம்மீது மட்டுமே குற்றங்களைச் சுமத்துகின்றனர். மனித உரிமைகள் மீறப்பட்டன, சர்வதேச போர் சட்டதிட்டங்கள் மீறப்பட்டன என்று இராணுவத்தினருக்கு எதிராக மட்டுமே விசாரணை நடத்தக் கோருகின்றனர்.

225 பேர் ஆதரவளித்தாலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் எனக் கூறியிருந்தேன். அது எனது அரசியல் நிலைப்பாடு. ஆனால் இன்று ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளது குறித்து என்னை விமர்சிக்க முடியும்.”

“117 பேர் கையெழுத்திட்டு, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு கேட்டுக்கொண்டதால் அவரைப் பிரதமராக நியமித்தேன். ஜனநாயக சமூகத்தின் சிறந்த அறிகுறியாக நான் இதனைக் காண்கின்றேன். ஆனால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்கும் எனது தனிப்பட்ட அரசியல்நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இன்றும் இல்லை. ”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s