-
பிரமிட்டைப் பார்த்து பிரமிக்கிறது உலகம்!
SHM எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் 4400 ஆண்டு பழமையான பிரமிட் தற்போது திறக்கப்பட்டுள்ளது. அங்கு குவிந்து கிடக்கும் புதையல், பொங்கிஷங்கள், மன்னர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் இருக்கின்றன. பழம் காலத்தில் மன்னர்கள் பயன்படுத்திய வைரம், வைடூரியம், தங்கம், செம்பு உள்ளிட்டவைகளும் புதையுண்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
-
புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்
ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர். அதன்படி மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலி, மத்திய மாகாண ஆளுநராக சத்தேந்திர மைத்ரி குணரத்னவும், வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்கவும், வடமேல் மாகாண ஆளுநராக பேசல ஜயரத்ன பண்டாரவும், கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
-
ஒரு நடிகையின் கதை
SHM மனிதனுக்கான மதிப்பு என்பது அவனிடம் புகழ், பணம், ஆதாயம் இருக்கும் வரை தான். இவை யாவும் இழந்த பிறகு தான் தன்னை சுற்றி இருப்பவர்கள் எதற்காக பழகினார்கள், யார் உண்மையானவர்கள் என்பதை ஒரு மனிதனால் உணர முடியும். உதவிக்கு இல்லை என்றாலும் கூட ஆறுதலுக்காகவாவது நல்ல சொந்தங்கள் நம்மை சுற்றி இருக்க வேண்டும். பணம், புகழை தாண்டி ஒரு மனிதன் முக்கியமாக சம்பாதிக்க வேண்டியது இதுதான். இதை பெரும்பாலானோர் தனது மரண படுக்கையில் தான் அறிகிறார்கள்.
-
அயர்லாந்து அணிக்கெதிரான இலங்கை குழாமில் சிராஸ்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அயர்லாந்து A அணிக்கும் இலங்கை A அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடர் மற்றும் உத்தியோகபூர்வமற்ற 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகிய போட்டிகளுக்கான இலங்கை குழாமில் மொஹம்மட் சிராஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
-
“தொடர்ந்து போராடுங்கள் இலங்கையின் வீரர் நீங்களே”
சரியான விடயமொன்றிற்காக போராடுபவர் ஆரம்பத்தில் தவறிழைப்பவராகப் பார்க்கப்பட்டாலும் இறுதியில் அவரே வெற்றியடைவார். நீங்கள் தான் இலங்கையின் வீரர். மியன்மார் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது என மியன்மாரில் இயங்கும் 969 பௌத்த அமைப்பின் தலைவர் அஷின் விராது தேரர் தெரிவித்துள்ளார்.
-
காத்தான்குடி அஷ்ஷைக் பாஷில், அக்குறனை மபாஸ் முப்தி ஆகியோரால் எழுதப்பட்டு அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற நூல் வெளியீடு
கொழும்பு: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் 2009ம் ஆண்டு உலமாக்களுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட நூல் எழுதும் போட்டியில் முதலாம் இடம் பெற்ற “சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை” எனும் மேற்படி நூல், அதன் பெறுமதியை உணர்ந்து பலரின் வேண்டுகோளுக்கிணங்க அல்லாஹ்வின் உதவியால் 30.12.2018 காலை தெஹிவளை முஹைதீன் ஜும்ஆப் பள்ளியில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
-
பெருங்குடல் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகள்
பெருங்குடல் புண் என்பது பெருங்குடலின் உட்சுவற்றிலும், மலக்குடலின் உட்சுவற்றிலும் புண்களை உண்டாக்கும் ஓர் நிலை. இதனால் பெருங்குடல் மற்றும் மலக்குடல் சிவப்பாக, வீக்கத்துடன் இருப்பதோடு, கடுமையான வேதனையைத் தரும்.ஆரம்பத்தில் வயிற்று வலியில் ஆரம்பித்தாலும், நிலைமை மோசமாகும் போது இதன் அறிகுறிகளும் தீவிரமாக காணப்படும். இங்கு உங்களுக்கு பெருங்குடல் புண் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
-
ஐக்கிய இராச்சிய வாழ் காத்தான்குடி உறவுகளின் மாபெரும் ஒன்றுகூடல்
– நமது நிருபர் லண்டன்: ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்துவரும் காத்தான்குடி உறவுகளின் 7வது ஒன்று கூடல் 27-12-2018 வியாழக்கிழமை Luton நகரில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பிற்பகல் ஒரு மணியிலிருந்து இரவு பத்துமணிவரை இடம்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஐக்கிய இராச்சியத்தில் பரந்து வாழும் காத்தான்குடி உறவுகள் மிக ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்.
-
கத்தார் வாழ் காத்தான்குடி சமூக அங்குரார்ப்பண ஒன்றுகூடல்
நமது நிருபர் டோஹா: கத்தாரில் வாழும் காத்தான்குடி சகோதரர்களின் பிரமாண்டமான முதலாவது ஒன்றுகூடல் இன்ஷாஅல்லாஹ் இன்று 21-12-2018 கத்தார், அல் சஹாமாவில் விமர்சையாக இடம்பெற இருக்கிறது. காத்தான்குடியையும் அதன் அண்மிய ஊர்களையும் வசிப்பிடமாகக் கொண்ட எம் உறவுகள் குடும்ப சகிதம் தங்களைது மகிழ்ச்சையைப் பகிர்ந்துகொள்ளும் ஓர் அரிய வாய்ப்பாக இந்நிகழ்வு அமைய இருக்கிறது.
-
காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள சகல பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் வழங்க ஏற்பாடு
– ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்;ள சகல பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர் (18.12.2018 செவ்வாய்) இன்று முதல் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிமனையூடாக வலயத்தின சகல பாடசாலை அதிபர்களிடம் வழங்கப்படுவதாக காத்ததான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் தெரிவித்தார்.
-
கல்லடிப் பாலத்திலிருந்து ஒருவர் குதிப்பு
மட்டக்களப்பு: கல்லடி பாலத்தில் இருந்து ஒருவர் குதித்துள்ளது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 9.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் கல்லடி பாலத்தில் குதித்துள்ளதாகவும், குறித்த நபர் வந்ததாக தெரிவிக்கப்படும் துவிச்சக்கர வண்டியும் அவரது பாதணியும் பாலத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.