49017815_971705763028201_8921049422033321984_oகொழும்பு: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் 2009ம் ஆண்டு உலமாக்களுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட நூல் எழுதும் போட்டியில் முதலாம் இடம் பெற்ற “சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை” எனும் மேற்படி நூல், அதன் பெறுமதியை உணர்ந்து பலரின் வேண்டுகோளுக்கிணங்க அல்லாஹ்வின் உதவியால்  30.12.2018 காலை தெஹிவளை முஹைதீன் ஜும்ஆப் பள்ளியில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந்த நூலை அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் உள்ளக செயலாளர் காத்தான்குடியை சேர்ந்த அஷ்ஷெய்க் பாழில் (ஹுமைதி) மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் உயர்மட்ட பத்வா குழு உறுப்பினரான அக்குறனையை சேர்ந்த அஷ்ஷெய்க் மபாஸ் முப்தி (யூசுபி) ஆகியோர் எழுதி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

49017815_971705763028201_8921049422033321984_o

மேற்படி நிகழ்வுக்கு ஜம்இய்யாவின் தலைவர் ரிஸ்வி முப்தி, செயலாளர் முபாரக் மதனி உட்பட முர்ஷித் முழாபர் ஹுமைதி, ஹாஷிம் சூரி, அப்துர் ரஹ்மான் மழாஹிரி, முக்சித் அஹ்மத் அல்பாசி, உமர்தீன் ரஹ்மானி, இர்பான் முபீன் ரஹ்மானி மற்றும் இன்னும் பல உலமாக்கள் உட்பட கொழும்பு பள்ளியாவயல்கள் சங்க நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி நூல் ஆங்கிலம், சிங்களம், அறபு, உறுது மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதன் அவசியத்தை ரிஸ்வி முப்தி கூறியதுடன் உடனடியாக சிங்கள மொழி பெயர்ப்பை செய்து முடிக்கும் பணியை ஒரு பள்ளிவாயல் நிருவாகம் பொறுப்பெடுத்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.