- நமது நிருபர்
டோஹா: கத்தாரில் வாழும் காத்தான்குடி சகோதரர்களின் பிரமாண்டமான முதலாவது ஒன்றுகூடல் இன்ஷாஅல்லாஹ் இன்று 21-12-2018 கத்தார், அல் சஹாமாவில் விமர்சையாக இடம்பெற இருக்கிறது. காத்தான்குடியையும் அதன் அண்மிய ஊர்களையும் வசிப்பிடமாகக் கொண்ட எம் உறவுகள் குடும்ப சகிதம் தங்களைது மகிழ்ச்சையைப் பகிர்ந்துகொள்ளும் ஓர் அரிய வாய்ப்பாக இந்நிகழ்வு அமைய இருக்கிறது.
பகல் மற்றும் இரவு உணவுகளுடன் முழு நாள் நிகழ்வாக இவ் ஒன்றுகூடல் இடம்பெறுகிறது. சிறுவர்கள், பெரியவர்களின் வெளிக்கீர்த்தியத் திறமைகளும் இந்நிகழ்வை அலங்கரிக்க இருக்கின்றன.
கத்தாரில் வாழும் எம் உறவுகளுக்கு ஏற்கனவே அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருப்பதாகவும், நேரகாலத்தோடு அனைவரையும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்துச்செல்லுமாறும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 40 வருடகால கத்தார் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கால வரலாற்றில் எம்மவர்களை ஒன்றிணைத்து நடாத்தப்படும் பிரமாண்டமான ஒன்றுகூடல் இதுவாகும்.