ஒரு நடிகையின் கதை

  • SHM

nisha noorமனிதனுக்கான மதிப்பு என்பது அவனிடம் புகழ், பணம், ஆதாயம் இருக்கும் வரை தான். இவை யாவும் இழந்த பிறகு தான் தன்னை சுற்றி இருப்பவர்கள் எதற்காக பழகினார்கள், யார் உண்மையானவர்கள் என்பதை ஒரு மனிதனால் உணர முடியும். உதவிக்கு இல்லை என்றாலும் கூட ஆறுதலுக்காகவாவது நல்ல சொந்தங்கள் நம்மை சுற்றி இருக்க வேண்டும். பணம், புகழை தாண்டி ஒரு மனிதன் முக்கியமாக சம்பாதிக்க வேண்டியது இதுதான். இதை பெரும்பாலானோர் தனது மரண படுக்கையில் தான் அறிகிறார்கள்.

nisha noor.jpg 1

1980களில் தென்னிந்திய சினிமா துறையில் பிரபலமான நடிகையாக வலம்வந்தவர் நிஷா நூர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமலுடன் எல்லாம் ஜோடி சேர்ந்து படங்களில் நடித்திருக்கிறார். இவர் சில பொலிவுட் படங்களிலும் நடித்திருந்தார்.தயாரிப்பாளர் ஒருவரால் ஏமாற்றப்பட்டதால் நிஷா விபச்சார தொழிலுக்கு தள்ளப்பட்டார். இதனால், திரை துறையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார் நிஷா.

nisha noor

பின்னாட்களில் இவரது நிலை கொஞ்சம், கொஞ்சமாக மோசமானது. ஒரு சமயத்தில் தெருவோரத்தில் கிடந்தார். பிறகு இவரை அருகே இருந்த மக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போதுதான். இவர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது அறியவந்தது. அது முற்றி எய்ட்சாக மாற, 2007ம் ஆண்டு மரணம் அடைந்தார் நிஷா நூர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s