-
40 ஆண்டு கால உலகக்கோப்பை சாதனை முறியடிப்பு
பேர்மிங்ஹம்: இங்கிலாந்து அணியின் துவக்க ஜோடி ஜோனி பேரிஸ்டோ – ஜேசன் ராய் இந்திய அணியை புரட்டிப் போட்டு வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தனர். இந்த ஜோடி 40 ஆண்டு கால உலகக்கோப்பை சாதனை ஒன்றை முறியடித்துள்ளது. அது இந்திய அணிக்கு எதிரான சாதனையாக பதிவுசெய்யப்படுகிறது . இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தது. உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் இது…
-
தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத் தடை
வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான நேற்று வெளியிடப்பட்ட கடிதம் ஒன்று, வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் சுசந்த பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.
-
புரிந்தவர்களுக்கு மட்டும்…
உசேன் வெசாக்கூடுகள் ஏற்றினோம் ஏழைகளைப் புறக்கணித்து நல்லிணக்க இப்தார் கொடுத்தோம் பள்ளிவாயலுக்குள் புகுந்து சுட்டவனுக்கு பொன்னாடை போர்த்தினோம் காமதுரு மரணத்திற்கு அருகில் இருந்து பிராத்தித்தோம் மலர்தட்டு கைகொண்டு மகிழ்ந்தோம் மார்க்க எதிர்த்தரப்பையும்
-
சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு
கொழும்பு: கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். சிறுக் குற்றங்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி, அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ள போராட்டம்
– பாறுக் ஷிஹான் கல்முனை: நாளை (20) கல்முனை மாநகரில் உள்ள பொதுஇடம் ஒன்றில் காலை குறித்த சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே வேளை கல்முனை மாநகர வளாகத்தில் முக்கிய உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வர்த்தக சமூகத்தினரின் பங்குபற்றலுடன் இன்று மாலை நடைபெற்று முடிந்த முக்கிய கூட்டம் ஒன்றில் தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்ம் தொடர்பாக முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
-
போராட்டம் என்பது தமிழ் இனத்திற்குப் புதிதான விடயமல்ல: வியாளேந்திரன்
தமிழ் இனத்திற்குப் போராட்டம் என்பது புதிதான விடயமல்ல என்பதனையும் இவ்விடத்தில் நான் கூறிவைக்க விரும்புகின்றேன். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுப்பதாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி பிரதேச செயலகம் முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகின்றது இந்நிலையில் இன்று உண்ணாவிதரத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் பார்வையிடச் சென்று அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-
நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை- ஹர்த்தாலுக்கும் அழைப்பு
– பாறுக் ஷிஹான் கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று (19) காலை நற்பிட்டிமுனை சந்தி கிட்டங்கி வீதி உள்ளடங்களாக பொதுக்கட்டடங்கள் தனியார் கல்வி நிலையங்கள் கடைகளில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
ஜனாதிபதி முகம்மத் முர்சியின் மரணமும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எதிரான கெடுபிடிகளும்
எகிப்திய வரலாற்றில் ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி முகம்மது முர்சி அவர்களின் மரண செய்தி உலக இஸ்லாமியர்களை கவலை அடைய செய்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் முப்பது வருடங்களாக சர்வாதிகார ஆட்சி செய்துவந்த ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியை யாராலும் அசைக்கமுடியாது என்ற நிலைமை அப்போது இருந்தது.
-
நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர் முகமத் மூர்சி
2013ஆம் ஆண்டு பதிவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அதிபர் முகமத் மூர்சி (67) நீதிமன்றத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.
-
வெற்றி மட்டும் எப்படி கிடைக்கும் சர்பிராஸ்?
மன்செஸ்டர் : ஒரு கேப்டன் எப்படி செயல்படக் கூடாது, எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக கை காட்டப்படுபவர் பாக். கேப்டன் சர்பிராஸ் அகமது. உலக கிரிக்கெட் வரலாற்றில் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் போட்டி முடிந்தது. இந்தியா வரலாற்று வெற்றியை பெற்றது. உலக கோப்பையில் தற்போது வரை தோற்காத அணியாக திகழ்கிறது இந்தியா. உலக கோப்பை வரலாற்றில் 7வது முறை ஒரே அணியிடம் பாகிஸ்தான் தோல்வி கண்டுள்ளது.
-
உலகம் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் உலகக்கிண்ணப்போட்டி
முகமட் ஜலீஸ் மன்செஸ்டர்: உலகக்கிண்ணம் 2019 இன் 22வது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (16) மன்செஸ்டர் நகரில் ஓல்ட் ட்ரஃபேர்ட் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகிறது. உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இதுவரை பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடிக்க முடியாமல் இருப்பது வரலாறாகவே இருக்கிறது. 1992 இல் இருந்து 2015 வரை 6 உலகக்கிண்ணப்போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்றிருக்கிறது.
-
இந்தியர்களை கேலி செய்து எடுக்கப்பட்ட பாகிஸ்தானின் கிரிக்கட் விளம்பரம்
முகமட் ஜலீஸ் லண்டன்: பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலைசெய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் போல் வேடமிட்ட ஓர் நபருடன் அவரை விசாரணை செய்யும் விதத்தில் நகைச்சுவையான தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று 2019 கிரிக்கட் உலகக்கிண்ணத்தை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. அபிநந்தனை விசாரணை செய்வது போல அமைந்த இக்காட்சியில் முதலாவது கேள்வியில்…