பேர்மிங்ஹம்: இங்கிலாந்து அணியின் துவக்க ஜோடி ஜோனி பேரிஸ்டோ – ஜேசன் ராய் இந்திய அணியை புரட்டிப் போட்டு வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தனர். இந்த ஜோடி 40 ஆண்டு கால உலகக்கோப்பை சாதனை ஒன்றை முறியடித்துள்ளது. அது இந்திய அணிக்கு எதிரான சாதனையாக பதிவுசெய்யப்படுகிறது . இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தது. உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் இது தான்.
1979ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மான்ட் ஹெய்னஸ் இந்திய அணிக்கு எதிராக 138 ரன்கள் சேர்த்து இருந்ததே உலகக்கோப்பை தொடரில் இதுவரை இருந்த சாதனை. இந்த சாதனையை முறியடித்து, பேரிஸ்டோ – ராய் ஜோடி 160 ரன்கள் சேர்த்தது.