- உசேன்
வெசாக்கூடுகள் ஏற்றினோம்
ஏழைகளைப் புறக்கணித்து நல்லிணக்க இப்தார் கொடுத்தோம்
பள்ளிவாயலுக்குள் புகுந்து சுட்டவனுக்கு பொன்னாடை போர்த்தினோம்
காமதுரு மரணத்திற்கு அருகில் இருந்து பிராத்தித்தோம்
மலர்தட்டு கைகொண்டு மகிழ்ந்தோம்
மார்க்க எதிர்த்தரப்பையும்
வியாபாரத்தில் போட்டிக்காரனையும்
தனக்குப்பிடிக்காதோரையும் காட்டிக்கொடுத்தோம்
பத்திரிகையாளர் மாநாடு போட்டோம்
காசுகொடுத்து சிங்கள செய்தித்தாள்களுக்கும் செய்திகள் அனுப்பினோம்
மொத்தத்தில் நாங்கள் மட்டும் வாழ வேண்டும் என நினைத்தீர்கள்
நீங்கள் அனைவரும் இந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்கின்றனர் அவர்கள்