Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • SLDC யின் ஏற்பாட்டில் யார் அந்த குரபாக்கள்”? எனும் தலைப்பில் கத்தாரில் அப்துல் பாஸித் புகாரியின் விசேட மார்க்கச் சொற்பொழிவு

    கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) பனார்: கத்தாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்தியப் பேச்சாளர்  அஷ்ஷெய்க் மௌலவி அப்துல் பாஸித் புகாரியின் விசேட மார்க்க சொற்பொழிவு  இன்ஷா  அல்லாஹ்            14/11/2014  நாளை வெள்ளிக்கிழமை கத்தார் அப்துல்லாஹ் பின் ஸைத் அரங்கில் (பனார்) இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் மௌலவி ஏ.சீ.என் முஹம்மத் (அப்பாஸி) தெரிவித்தார்.

  • மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தின் 4வது பரிசளிப்பு விழா

    எம்.ரீ.எம்.பாரிஸ் ஓட்டமாவடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலகத்திற்குற்பட்ட மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தின் 4 வது பரிசளிப்பு விழா மீராவோடை  பொதுச் சந்தை அமீர் அலி கேட்போர் கூடத்தில் வித்தியாலயத்தின் அதிபர் எம்.மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்றது.  இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.

  • அல் மனார் அறிவியற் கல்லூரிக்கு 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் தெரிவு

    அல் மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: காத்தான்குடி அல் மனார் அறிவியற் கல்லூரிக்கு 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் தெரிவு எதிர்வரும் 06 மற்றும் 07.12.2014 ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி, கடற் கரை வீதியிலமைந்துள்ள எமது அல் மனார் நிறுவனத்தில் இடம்றெவிருப்பதாக செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி  தெரிவித்தார்.

  • “எனக்கு இரண்டு அடிக்கு முன்னால் ஒஸாமா நின்றுகொண்டிருந்தார்: அவரது கையை மனைவி பற்றிக்கொண்டிருந்தார்”

    – ஒஸாமா பின்லேடனை கொன்ற அனுபவம் குறித்து அமெரிக்க நேவி சீல் வீரர் நியுயோர்க்: அல் கய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றவராக அறிவித்திருக்கும் அமெரிக்க முன்னாள் நேவி சீல் வீரர் ரொபட் ஓனைல், அந்த சம்பவம் குறித்து பொக்ஸ் நியுஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அல் கய்தா தலைவரை தாமே இறுதியாக பார்த்தவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • தனது சுயசரிதையில் பொய்யான தகவல்களை குறிப்பிட்டுள்ள சச்சின்

    மும்பை: கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின டெண்டுல்கருடைய சுயசரிதை நூலான “ப்ளேயிங் இட் மை வே” (Playing It My Way) கடந்த 6ஆம் திகதி வெளியாகியது. புத்தகம் வெளியான நாளிலிருந்து விற்பனையில் அமோக வரவேற்பு பெற்றுள்ள அதேவேளை, பல எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

  • கட்டாரில் ‘நல்ல இல்லம்’ என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு

    கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா  இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி  13-11-2014 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.

  • நாளைய இளம் தலைவர்கள் கௌரவிப்பும், விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்

    ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் நாளைய இளம் தலைவர்கள் கௌரவிப்பும், விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் 14.11.2014 ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு சாய்ந்தமருது வொலிவேரியன் பல்தேலை கட்டிட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

  • நல்லாட்சியை நிறுவுவதற்கான தேசிய வேலைத்திட்டத்தில் NFGG இணைவு

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றினை அவசரமாக நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கும் இத்தருணத்தில், அவ்வாறான ஒரு தேர்தலுக்கான அவசரமும் அவசியமும் நாட்டு மக்களுக்கு இல்லை. ஆனால் மக்களின் நலன் கருதி உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன. சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்திருக்கிறது. நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக மக்கள் உணர்கிறார்கள்.

  • உலகக்கிண்ணம்-2015: சூப்பர் ஓவர் நீக்கம்: பரிசுத்தொகை ரூ.60 கோடி!

    மெல்போர்ன்: உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) எதிர்வரும் பெப்ரவரி 14-ம்திகதி முதல் மார்ச் 29-ம்திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்றுமுன்தினம் ஆலோசனை செய்தது. இதன்படி உலகக்கிண்ணத்தில் நொக்அவுட்’ சுற்றில் சூப்பர் ஓவரை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

  • புதிய தாதியர் நியமனம்

    கொழும்பு: புதிய தாதியர்களாக பயிற்சியில் இணைந்துகொள்ளும் 5000 பேருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று நியமனக் கடிதங்களை வழங்கினார். கொழும்பு சுகததாஸ உள்ளரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புதிய தாதி ஒருவர் நியமனக் கடிதத்தை பெறுகிறார். அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பிரதி அமைச்சர் லலித் திஸாநாயக்க உட்பட முக்கியஸ்தர்களை படத்தில் காணலாம்.

  • மட்டு வைத்தியசாலைக்கு மட்டு இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பினால் வழங்கப்பட்ட அன்பளிப்பு!

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பினால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் இலகுவான முறையில் வைத்தியாலையிலுள்ள சேவை பிரிவுகளை அடையாளம் காண்பதற்கு தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் பெயர் பலகைகள் மற்றும் டி.வீ.டி. பிலேயர் (எண்ணியல் ஒளிக்காட்சி) என்பன அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

  • மஜ்லிசுல் உலமாவுக்கு விவாத ஒப்பந்த அழைப்பு

    – NTJ (பெரிதாகக் காண இங்கு சொடுக்குக)

←Previous Page
1 … 621 622 623 624 625 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar