அல் மனார் அறிவியற் கல்லூரிக்கு 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் தெரிவு

almanarஅல் மனார் ஊடகப்பிரிவு

காத்தான்குடி: காத்தான்குடி அல் மனார் அறிவியற் கல்லூரிக்கு 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் தெரிவு எதிர்வரும் 06 மற்றும் 07.12.2014 ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி, கடற் கரை வீதியிலமைந்துள்ள எமது அல் மனார் நிறுவனத்தில் இடம்றெவிருப்பதாக செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி  தெரிவித்தார்.

தரம் எட்டு சித்தியடைந்து 2015 ஜனவரி தரம் ஒன்பது கல்வி கற்கவிருக்கும் மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதுடன் தேசிய, ஷரீஆ மற்றும் தொழில் நுட்பக்கல்விகளில் பயிற்றுவிக்கப்படுவதுடன் மொழி, ஆளுமை விருத்தி, தலைமைத்துவ மற்றும் உளவியல் ரீதியான செயற்பாடுகளிலும் விஷேட கவனம் செலுத்தப்படவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் மும்தாஸ் மதனி மேலும் கூறினார்.

தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான உணவுக்குரிய கொடுப்பணவு தவிர ஏனைய அனைத்து பாடநெறிகளும் இலவசமாக வழங்கப்படவிருப்பதுடன் வருடாந்தம் அவர்களுக்கான சீருடைகளும் இனாமாகவே வழங்கப்படுமெனவும் மும்தாஸ் மதனி குறிப்பிட்டார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் நாலா பக்கங்களிலிருந்தும் ஏறக்குறைய 30 மாணவர்கள் மாத்திரமே இக்கற்கை நெறிகளுக்காக தெரிவு செய்யடவுள்ளதுடன், இம்மாணவர்கள் எதிர்காலத்தில் மௌலவிகளாக மட்டுமல்லாமல் விருப்பிய துறைகளில் பட்டம்பெற்று துறைசார் நிபுணர்களாக விளங்க வேண்டும் என்பது எமது முக்கிய கடமைகளிலொன்றாக காணப்படுகின்றது. அந்தவகையில் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு தயார் படுத்தும் அதேவேளை அன்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் பட்டமொன்றை பெற்று கொள்ளும் முகமாகவும் எமது பாடவிதானங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் அஷ்ஷெய்க் மும்தாஸ் குறிப்பிட்டார்.

இத்தகைய பேறுகளை மேலும் பலர் பெற்று கொள்ள வேண்டுமென்ற முக்கியஸ்தர்களது வேண்டுகோளை கருத்திற் கொண்டு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இம்மாத முடிவுக்குள் தமது விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்குமாறும் கோரப்படுகிறது.

மேலதிக விபரங்களுக்கு…

எம்.ஐ.எம். அன்வர்,

பிரதிப்பணிப்பாளர் (தேசிய கல்விப்பிரிவு),

அல் மனார் நிறுவனம், புதிய காத்தான்குடி.

எனும் முகவரிக்கு அல்லது 077 9232130, 065 2245797 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

Published by

Leave a comment