Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து 4 சதங்கள் அடித்து சங்ககாரா உலக சாதனை!

    – SHM ஹோபர்ட்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக, தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சதம் அடித்து, புது உலக சாதனை படைத்துள்ளார், இலங்கையின் நட்சத்திர வீரர் குமார் சங்ககாரா. உலக கோப்பையில், இன்று இலங்கையும், ஸ்கொட்லாந்தும் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, ரன் குவிப்பில் ஈடுபட்டது. குமார் சங்ககாரா இந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

  • ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான முறைப்பாடுகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் NFGG இன்று சமர்ப்பித்தது

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான முறைப்பாடுகளை இலஞ்சம் ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) இன்று (11.03.2015) கொழும்பில் கையளித்துள்ளது. இம்முறைப்பாடு NFGGயின் சிரேஷ்ட உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய ALM சபீல் அவர்களால் இன்று காலை 10.30 மணியளவில் கையளிக்கப்பட்டது.

  • உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் ஏழை முஸ்லிம் விவசாயிகளுக்கும் தமிழ் குடும்பங்கள் சிலருக்கும் பாவனைப் பொருட்கள் வழங்கி வைப்பு

    -பழுலுல்லாஹ் பர்ஹான் உன்னிச்சை: உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பல்வேறு கஷ்டங்களோடு மீள்குடியேறி வாழ்ந்து வருகின்ற ஏழை முஸ்லிம் விவசாயிகளுக்கும், தமிழ் குடும்பங்கள் சிலருக்கும் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் 08.03.2015 கடந்த ஞாயிற்றுக்கிழமை பாவனைப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

  • உயர்கல்வி வளாகங்களில் உள்ள முஸ்லிம் மஜ்லிஸ்கள் ஊக்குவிக்கப் படுதல் பிரதானமான சமூகப்பணியாகும்!

    – மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: இலங்கையில் உள்ள பலகலைக் கழகங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள், உயர் தொழில் நுட்பக் கல்லூரிகள், கல்விக் கல்லூரிகள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கற்கின்ற முஸ்லிம் மாணவர் மஜ்லிஸுகள் குறித்து சமூகத்தலைமைகள் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும்.

  • மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் பள்ளிவாயலில் பாராட்டு வைபவம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி, மூன்றாம் குறிச்சி ஊர் (பழைய கல்முனை) வீதியில் அமையப்பெற்றதும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் வரலாற்றில் மிக தொன்மை வாய்ந்த பள்ளிவாயலுமான மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் பள்ளிவாயலில் இயங்கிவரும் அல்-குர்ஆன் மத்ரசாவின் மாணவ, மாணவிகள் கடந்த 2013, 2014 ஆண்டுகளில் குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சபையின் பொதுப் பரீட்சையில் சிறப்பான முறையில் சித்தியடைந்து- விருதுகளும், பரிசில்களும், சான்றிதழ்களும் பெற்றமைக்காக பாராட்டு வைபவம் ஒன்று இடம்பெறவுள்ளது.

  • மாகான் மாக்கார் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி: வீடியோ

    ஓட்டமாவடி அஹமட் இர்சாத்

  • மாகான் மாக்கார் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக முதலமைச்சர்

    ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் ஏறாவூர்: ஏறாவூர் மாகான் மாக்கார் மகா வித்தியாலையத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று 10.03.2015 செவ்வாய்க் கிழமை பாடசாலை மைதானத்தில் பாடசாலை முதல்வர் தலைமையில் நகர்புற பாடசாலைகளின் தரத்துக்கு அமைவாக மிக கோலாகலமாக இடம் பெற்றது.

  • கலப்பு தேர்தல் முறையினை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

    எம்.எச்.எம்.அன்வர் கொழும்பு: ஏதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கலப்பு தேர்தல் முறையினை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விகிதாசார மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறையிலேயே இது இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

  • சீகிரிய சுவரில் எழுதி கைதாகியுள்ள யுவதியை பொது மன்னிப்பில் விடுதலை செய்யுங்கள்: NFGG ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கின்றது

    NFGG ஊடகப்பிரிவு சித்தாண்டி: சீகிரியாவிற்கு கடந்த 14.02.2015 அன்று தன்னுடைய நண்பிகளுடன் சுற்றுலா சென்ற சித்தாண்டி, விநாயகர்புரத்தினைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (27) என்ற யுவதி அங்குள்ள சுவர் ஒன்றில் தனது பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டில் அங்கு காவற்கடமையில் இருந்த பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு 02.03.2015 அன்று தம்புள்ளை பொலிஸாரினால் தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட வேளை தொல்பொருட்களைச் சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத் தண்டனை…

  • ‘புதிய தேர்தல் முறை தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள முன்வரவேண்டும்’: NFGG வேண்டுகோள் விடுக்கின்றது

    NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: ‘புதிய தேர்தல் முறை, சிறுபான்மை சமூகங்களின் நியாயமான அரசியல் பிரதிநிதித்துவங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும். இதனை உறுதி செய்வதற்காக சகல சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டும்’ என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

  • சிறையில் வாடும் சித்தாண்டி ஏழை யுவதிக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுங்கள் – ஜனாதிபதியிடம் கிழக்கு ஊடக சங்கம் கருணை மனு

    EMS சித்தாண்டி: சிகிரியா குன்றுக்குச் சுற்றலா சென்ற வேளையில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தம்புள்ளை நீதவான் நீதிபதியினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சித்தாண்டியைச் சேர்ந்த செல்வி சின்னத்தம்பி உதயசிறி எனும் ஏழைத் தமிழ் யுவதியை பொது மன்னிப்பளித்து விடுதலைசெய்யுமாறு மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களைக் கோரும் அவசர காருண்ய மனுவொன்றை கிழக்கு ஊடக சங்கம் இன்று (10.03.2015) காலையில் தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துள்ளது.

  • இரஜாங்க அமைச்சர் ஹஸன் அலி: எ.சி. எஹியாகான் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்கள்

    எ.சி. எஹியாகான் அம்பாறை: அண்மையில் இரஜாங்க அமைச்சர் ஹஸன் அலி அவர்களை அமைச்சர் ரஊப் ஹக்கீமின் இணைப்பு செயளாளர் ரகுமத் மன்சூர் மற்றும் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்டப் பொருளாளருமான எ.சி. எஹியாகான் மற்றும் அமைச்சின் அதிகாரி ஜஸ்லி Central Committe  புணரமைப்பு சம்மந்தமாக கலந்துரையாடப்பட்ட போது எடுக்கப்பட்டது.

←Previous Page
1 … 497 498 499 500 501 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar