ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான முறைப்பாடுகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் NFGG இன்று சமர்ப்பித்தது

sabeel– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

கொழும்பு: முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான முறைப்பாடுகளை இலஞ்சம் ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) இன்று (11.03.2015) கொழும்பில் கையளித்துள்ளது. இம்முறைப்பாடு NFGGயின் சிரேஷ்ட உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய ALM சபீல் அவர்களால் இன்று காலை 10.30 மணியளவில் கையளிக்கப்பட்டது.

முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினாலும் அவரது சகாக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகள், ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மிக நீண்ட காலமாகவே குரல் கொடுத்து வருகிறது.

sabeel

காத்தான்குடி நகரசபையில் பிரதான எதிர்கட்சியாக அங்கம் வகிக்கும் NFGG அங்கு நடைபெறும் பல்வேறு மோசடிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக நகரசபைக்குள்ளேயும் அதற்கு வெளியிலும் தொடர்ந்தும் குரல்கொடுத்து வந்திருக்கிறது. பல்வேறு மோசடிகளை ஆதார பூர்வமாக NFGG முன்வைத்த போதிலும் அவற்றைத் திருத்திக் கொள்வதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பூரண கட்டுப்பாட்டில் இயங்கும் காத்தான்குடி நகரசபை ஒரு போதும் முன்வரவில்லை.

அது போன்றே காத்தான்குடி நகரசபைக்கு வெளியில் ஹிஸ்புல்லாஹ்வினால் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் பலவற்றில் நிகழ்ந்த பாரிய மோசடிக்கள் தொடர்பாகவும் NFGG பல்வேறு தரப்பினருக்கும் சுட்டிக்காட்டி வந்தது. அவை தொடர்பிலும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

NFGG Bribery 11.03.2015 (3)

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றத்தினைத் தொடர்ந்து, கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் NFGG நடாத்திய ஊடக சந்திப்பின்போது, ஒரு விசேட உள்ளூர் பொறிமுறை ஒன்றின் மூலம் ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்றும் NFGG கோரியிருந்தது.

அத்தோடு, இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவிடம் இவர் தொடர்பிலான முறைப்பாடுகள் கையளிக்கப்படும் எனவும் NFGG தெரிவித்திருந்தது. அந்த வகையிலேயே இன்று ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான முறைப்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இம்முறைப்பாடுகள் தொடர்பிலான மேலதிக விபரங்களையும் சாட்சியங்களையும் ஆணைக்குழுவிற்கு வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும் இது தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் NFGG ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Published by

3 responses to “ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான முறைப்பாடுகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் NFGG இன்று சமர்ப்பித்தது”

  1. fhj;jhd;Fbapy; ,aq;fpte;j UNHABITAT mYtyfj;jpd; epjp eltbf;iffs; rk;ge;jkhf ahh; ,yQ;r Coy; Mizf;FOtpy; KiwapLtJ.
    my;yh`;tpd; ifapy; tpl;LtpLNthk;. my;yh`{ mf;gh

  2. First inquiry Against UNHABITAT activities in Kattankudy.
    Allahu akbar….

  3. அடங்காச் சோனகன் Avatar
    அடங்காச் சோனகன்

    வெட்கமாக இருக்கின்றது
    வேதனையாக இருக்கின்றது

    குண்டுச் சட்டிக்குள்ளே மீண்டும்
    குதிரையின் கால்…
    குதிக்க தொடங்கியுள்ளது.

    NFGG உடன்பிறப்புகளே1…
    அல்லாஹ் உங்களுக்கு தந்த
    அகன்ற சிறகுகளால்..இந்த
    விரிந்த வானத்தில்
    பறக்கக் தெரியவில்லை

    தனது இருப்பை..
    கேள்விக்குறியாக வளைத்து…
    கூனிக்கிடக்கின்றது சமூகம்!..

    தொகுதிவாரித் தேர்தலிலே..
    தோற்றுப்போக…
    காத்துக்கிடக்கிறது சமூகம்!..

    காணிப்பகிர்வு இல்லை..
    இன்னும் முழுமை பெறவில்லை..
    கோணிக் கிடக்கிறது சமூகம்!..

    அரசதுறைகளில் இன்னுமில்லை..
    அலுவலங்களில் நாமில்லை…
    அடங்கிக்கிடக்கிறது சமூகம்!..

    எல்லைப்பிரச்சினை தீரவில்லை..
    எடுத்து இயம்பவும் தெரியவில்லை..
    ஏங்கிக்கிடக்கிறது சமூகம்!..

    விரட்டியடிக்கப்பட்ட ஊர்களிளே மீள…
    வேரூன்ட முடியவில்லை இன்னும்..
    நாறிக்கிடக்கிறது சமூகம்!..

    “கல்வித்துறை மண்..
    கவ்விக்கிடக்கின்றது..
    மாற்றானிடம் இன்னும் மடிப்பிச்சை…

    கல்விவலயத்தின் வளங்களும்..
    பாடசாலையின் வளங்களும்..
    இன்னும் பயன்படுத்த படவேயில்லை.

    புதல்விகளுக்கு மாத்திரமே கல்வி..
    புதல்வர்கள் வெளிநாடு புக..
    புதுப்புது கல்வி…

    மாவட்டத்தில்.. மாகாணத்தில்..
    முழுத்தேசத்திலும் நமது பிள்ளைகள்
    உயர்ந்து செல்ல எந்த உந்தலுமில்லை”.

    இன்னுமின்னும் எத்தனையெத்தனை பிரச்சினைகள்
    நமது வானில் விரிந்துகிடக்கிறது.
    உங்கள் சிறகுகளால் அகலப்பறவுங்கள்..

    எங்கேயோ எப்போதோ…
    வயல்களை ஊழுத மாடுகளைப்பார்ப்பதும்…
    வைக்கோல்போரினில் உற்கார்வதும்
    சிறுநீர் கழிப்பதும் வேண்டாம்.
    இது சிறுபிள்ளைத்தனம்!!!

    (வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்)

    அல்லாஹ் உங்களுக்கு
    அகன்ற சிறகுககளை தந்துள்ளான்
    உங்கள் சிறகுகளால் அகலப்பறவுங்கள்..
    இந்த சமூகத்தின்
    அடிமைத்தனத்தை அகற்றுங்கள்..

    அல்லாஹ் அருள்புரியட்டும்!!

Leave a comment