ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து 4 சதங்கள் அடித்து சங்ககாரா உலக சாதனை!

sanga-YKK– SHM

ஹோபர்ட்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக, தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சதம் அடித்து, புது உலக சாதனை படைத்துள்ளார், இலங்கையின் நட்சத்திர வீரர் குமார் சங்ககாரா. உலக கோப்பையில், இன்று இலங்கையும், ஸ்கொட்லாந்தும் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, ரன் குவிப்பில் ஈடுபட்டது. குமார் சங்ககாரா இந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

உலக கோப்பை தொடரில் அவர், பதிவு செய்யும் தொடர்ச்சியான 4வது சதம் இதுவாகும். முன்னதாக, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக, சங்ககாரா சதம் அடித்திருந்தார்.

sanga-YKK

இன்றைய போட்டியில் அவர் பதிவு செய்த சதத்தின்மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இதுவரை 3 ஆயிரத்து 631 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. அதில் நிகழாத ஒரு சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment