கலப்பு தேர்தல் முறையினை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

srilanka_parliament-8[1]எம்.எச்.எம்.அன்வர்

கொழும்பு: ஏதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கலப்பு தேர்தல் முறையினை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விகிதாசார மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறையிலேயே இது இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஏற்கனவே காணப்படும் விகிதாசார தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கவும் கட்சி தாவுதல் போன்ற விடயங்களை தடுக்க கூடியதாகவும் இத்தேர்தல் அமையவுள்ளதாக இருப்பினும் முற்று முழுதாக தொகுதிவாரி தேர்தல் முறையை அமுல்படுத்தாது.

70% விகிதாசாரமும் 30 % தொகுதிவாரியும் இணைத்தே அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பன கொள்கை அளவில் இணங்கியுள்ளபோதிலும் இதன் அதிகாரங்கள் இது எவ்வாறு அமையப்போகிறது என்பது தொடர்பான தெளிவுகள் இன்னும் இல்லை என அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment