சாய்ந்தமருது: துருவம் ஊடக வலையமைப்பு இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து கடந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மாபெரும் பரிசளிப்பு விழாவொன்றை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இப்பரிசளிப்பு விழா 21ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கல்முனை வலயத்துக்குட்பட்ட 340 மாணவர்கள் பரிசு வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.
இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மெளலானா இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்கிறார். கெளரவ அதிதிகளாக முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மையத்தின் ஸ்தபாகர் தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
விசேட அதிதிகளாக கல்முனை நிலைய பொலிஸ் அதிகாரி ஏ.டபிள்யூ. கப்பார், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் என். ஆரிப், பொறியியலாளர் தம்பிலெப்பை இஸ்மாயில் உட்பட கல்விமான்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.
இந்நிகழ்வில் மாணவர்களுக்கு புத்தகப் பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களுடன் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படும். கல்முனை வலயத்தில் அதிகூடிய புள்ளியைப் பெற்ற மாணவருக்கு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்.
கடந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, கல்முனை வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அதிபர்கள் வாயிலாக அறவித்தல் வழங்கப்பட்டுள்ளது. எனவே, குறித்த மாணவர்கள் உரிய நேரத்துக்கு வருகைதருமாறு வேண்டப்படுகின்றனர்.
Published by

Leave a comment