Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அல்-மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் சேகு அலியை வரவேற்கும் நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான், எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி அல்-மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நிமியமிக்கப்பட்டுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. சேகு அலியை வரவேற்கும் நிகழ்வு 23-04-2015 இன்று வியாழக்கிழமை அல்-மனார் நிறுவனத்தின் அர்ராஷித் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

  • வடமாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள தபால்துறை முஸ்லிம் சமய விவகார அமைச்சர்

    மன்னார் நிருபர் மன்னார்: தபால்துறை மற்றும் முஸ்லிம் சமய விவகார  அமைச்சர் அப்துல் ஹலீம் அவர்கள் எதிர்வரும் மே மாதம் 10 ம் திகதி அளவில் வடமாகாணத்துக்கு விஜயம் செய்ய உள்ளதோடு வடமாகாண பள்ளிவாசல்கள் நிர்வாகிகள், பரிபாலனசபை தர்மகர்த்தாக்கள் மத்ரசா நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகவும் தபால்துறை முஸ்லிம் கலாசார அமைச்சரின் வடமாகாணத்துக்கான இணைப்பாளரும், வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைவருமான மெளலவி ஏ.எஸ்.எச்.எம். முபாரக் ரஷாதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

  • கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள்: பரங்கிப்பேட்டை ஜமாஅத்துல் உலமா ஏற்பாடு

    கலீல் பாகவீ பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் திங்கள் கிழமை (ஏப்ரல் 27/ 2015) தொடங்க இருப்பதாக அதன் நிர்வாகிகள் கூறினர். 

  • இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னிலையில் கோத்தபாய ஆஜர்

    கொழும்பு: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சற்று முன்னர் கோத்தபாய இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. அவன்ட்கார்ட், லக்ன லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

  • “பாகிஸ்தான் அணியில் நிறைய பிரச்சினை இருக்கின்றன “: வகார் யூனுஸ்

    லாஹூர்: “பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. அவையனைத்தும் சரி செய்யப்படுவது அவசியம்” என அவ்வணியின் பயிற்சியாளர் வக்கார் யூனுஸ் கூறியுள்ளார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு வங்க தேசத்திடம் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான், இப்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது.

  • “எனக்கும் குடும்பத்திற்கு எதிராகவும் ஆதாரமற்ற சூனிய வேட்டை” : மஹிந்த

    கொழும்பு: தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் எதுவித சாட்சியங்களுமின்றி சூனியவேட்டை நடத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏ.எப்.பி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  • நல்லாட்சி அரசு இன்றுடன் பூர்த்தி

    கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் இன்று நூறு நாட்களை நிறைவு செய்கிறது. ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசாங்கம் இன்று 23ம் திகதி நூறு நாளைப் பூர்த்தி செய்கிறது.

  • சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை உடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கரு செயலாளருக்கு பணிப்பு

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையினை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் பராமரிப்பு குழுத் தலைவர் ஏ.ஹிபத்துல் கரீம் தெரிவித்தார்.

  • சாய்ந்தமருது பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களும், வெளிக்கள உத்தியோகத்தர்களும் கவனயீர்ப்பு போராட்டம்

    ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: வெளிக்கள அரச ஊழியர்களுக்கு மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தில் அம்பாறை மாவட்ட கிராம உத்தியோகத்தர்களும், வெளிக்கள உத்தியோகத்தர்களும் புறக்கணிக்கப்பட்டதையிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களும், வெளிக்கள உத்தியோகத்தர்களும் இணைந்து பிரதேச செயலக முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (22) புதன்கிழமை ஈடுபட்டனர்.

  • நல்லாட்சி நாடகத்தில் பசில் கைது!

    – SHM கொழும்பு: முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  • 100நாள் முடிவடைகின்றது: ஜனாதிபதி நாளை விசேட உரை

    கொழும்பு: அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டம் நாளையுடன் முடிவடைவதோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஆற்றவுள்ளார். இத்தகவலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது.

  • வடமாகாண ஆளுநருக்கு நன்றிதெரிவிக்கிறது வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு

    – மன்னார் நிருபர் கிளிநொச்சி: அண்மையில் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தினால் யாழ்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாப் ஏ எச் ஜமால் மொஹிடீன் தலைமையில் யாழ் ஆளுநர் இல்லத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட வடமாகாண ஆளுநர் திரு பளிகக்கார அவர்கள் 1990 ஆம் ஆண்டு இரண்டு மணி நேர அவகாசத்தில் யாழில் வாழ்ந்து வந்த முஸ்லீம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை

←Previous Page
1 … 456 457 458 459 460 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar