சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை உடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கரு செயலாளருக்கு பணிப்பு

sainthamaruthu– ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையினை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் பராமரிப்பு குழுத் தலைவர் ஏ.ஹிபத்துல் கரீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரியவுக்கும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக குழுவினருக்குமிடையே நேற்று  (22) உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெற்றது.

sainthamaruthu

இக்கலந்துரையாடலில் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை கோருவதற்கான தேவைப்பாடுகள், அதற்கான தரவுகள் மற்றும் மக்களின் விரும்பங்கள் என்பவற்றை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கரு ஜயசூரிய சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை உடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் கே.தடெல்லகேவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

sainthamaruthu (2)

இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹசன் அலி, பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக், பாராளுமன்ற உறுப்பினா் பைசால் காசீம், மாகாண அமைச்சா் எம்.ஐ.எம்.மன்சூா், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வா் ஏ.எல்.ஏ.மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளா் ஏ.எல்.எம்.சலீம், மாநகர சபை உறுப்பினா்களான எம்.ஐ.பிர்தௌஸ், ஏ.ஏ.வஸீா், ஏ.நஸார்தீன், மு.கா உயா்பீட உறுப்பினா் ஏ.சீ.எம்.யஹியாகான் உள்ளிட்ட சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவா் வை.எம்.ஹனீபா தலைமையிலான நிர்வாக சபை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை தொடர்பாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரியவுடனான கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment