நல்லாட்சி நாடகத்தில் பசில் கைது!

bazil– SHM

கொழும்பு: முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக அவர் இன்று நிதி குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை 11.00 தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை அவரிடம் விசாரணை மேற்கொண்டதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

bazil

பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கும் ஜனாதிபதி மைத்திரியின் நல்லாட்சியானது, கொள்ளையர்களுக்கும் ஊழல் புரிந்தவர்களுக்கும் அரச சிம்மாசனங்களை வழங்கி கௌரவப்படுத்தி வந்த நிலையில், பசில் ராஜபக்ஸவைக் கைது செய்துள்ளது போல் ஓர் நாடகத்தை தற்பொழுது அரங்கேற்றி இருக்கின்றது.

மகா ஊழல்வாதியான மஹிந்த ராஜபக்ஸ சுதந்திரமாக இருக்கும் இந்நிலையில், பசிர் ராஜபக்ஸவை அமெரிக்காவில் இருந்து வரவழைத்து கைது செய்திருப்பது, புத்திசுவாதீனமான ஓர் சம்பவமாக அமையப்போவதில்லை.

Published by

Leave a comment